Just In
- 16 min ago
தீவிர சிகிச்சை.. 98 வயதில் கொரோனாவை வென்ற ரஜினி, கமல் பட நடிகர்.. முன்னாள் பாடி பில்டராமே!
- 49 min ago
ஃபைட்டர் இல்லையாம்.. விஜய் தேவரகொண்டா நடிக்கும் பட டைட்டில் இதுதான்.. பர்ஸ்ட் லுக் மிரட்டுதே!
- 1 hr ago
ஆரியின் வெற்றி.. தர்மம் நின்று கொல்லும்.. கொன்றது.. குஷி மோடில் பிரபலம்.. தரமான செய்கை!
- 1 hr ago
தனுஷ் படத்தில் நடிக்கும் சூர்யாவின் நண்பர்!
Don't Miss!
- News
தமிழ் மக்களை வெளிச்சத்திற்கு இட்டு செல்வேன்.. "டார்ச்லைட்" அடித்து... சிம்பாலிக்காக சொன்ன கமல்!
- Sports
வெளிப்பட்ட ஆக்ரோஷம்.. பறந்த பவுன்சர்கள்..இனவெறி தாக்குதல்களுக்கு.. பவுலிங் மூலம் பதிலடி தந்த சிராஜ்
- Lifestyle
கொரோனா வைரஸ் உங்க இதயத்தை மோசமா பாதிச்சிட்டிருக்கு என்பதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்!
- Finance
15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..!
- Automobiles
உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை, சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஜய் சேதுபதி மாஸ்டர் ஷுட்டிங் ஸ்பாட்ல கொடுத்தது ஆடியோ லாஞ்சில் திருப்பி கொடுத்த விஜய்!
சென்னை: மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஷுட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதியிடம் இருந்து பெற்றதை திரும்ப கொடுத்தார்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
கடந்த முறை விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் இம்முறை ஸ்டார் ஹோட்டலில் சிம்பிளாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விஜய்கிட்ட அம்மாவா நான் எதிர்பார்க்கிறது இதைதான்... மாஸ்டர் ஆடியோ விழாவில் ஷோபா சந்திரசேகர்

பாராட்டு
இதில் பங்கேற்ற படக்குழுவினர் அனைவருமே மிகவும் சுவாரசியமாக பேசினர். குறிப்பாக விஜயும் விஜய் சேதுபதியும் பேசியது முழுவதுமே ரசிக்கும் வகையில் இருந்தது. விஜய் சேதுபதி பேசும் போது நடிகர் விஜயை பாராட்டியும் புகழ்ந்தும் பேசினார். விஜய் ரொம்ப நல்லவர் எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும்.

க்ளோஸ் அப் வையுங்க
அவருடன் படத்தில் நடிப்பதால் இதை சொல்லவில்லை. அதற்கு முன்பாகவே அவரை எனக்கு பிடிக்கும் என்றார். அவர் கொடுக்கும் குட்டி குட்டி ரியாக்ஷன்கள் கூட எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். அப்போது விஜய் வெட்கப்பட்டு சிரிக்க, கேமரா மேன்களை விஜய்க்கு க்ளோஸ் அப் வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மனதிலும் இடம்
விஜய் வெட்கப்பட்டால் மிகவும் அழகாக இருப்பார். ஒரு ஆணால் மற்றொரு ஆண் வெட்கப்படுவது வரலாறு குறித்து வைத்து கொள்ளுங்கள் என்றும் விஜய்சேதுபதி கூறினார். அவரை தொடர்ந்து பேசிய நடிகர் விஜய், பதிலுக்கு விஜய் சேதுபதியை புகழ்ந்தார். பெயரில் மட்டுமல்லாமல் மனதிலும் தனக்கு இடம் கொடுத்துள்ளார் என்றார்.

திருப்பி கொடுக்கலாமா?
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருக்கிறார். ஆனால் இந்தப் படத்தில் ஏன் நடிக்க ஒத்துக்கொண்டார் என கேட்டதற்கு உங்களை ரொம்ப புடிக்கும்னு நாலே வார்தையில் முடித்து விட்டார் என்றார். பின்னர் விஜயிடம் பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஷுட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதியிடம் இருந்து வாங்கியதை அவரிடம் திரும்பி கொடுத்துவிடலாமா என கேட்டனர்.

கட்டியணைத்து முத்தம்
அதற்கு உடனே ஓகே சொன்னார் விஜய். தொகுப்பாளார்கள் விஜய் சேதுபதியை மேலே அழைக்கலாம் என்று கூறியும் கேட்காத விஜய் மேடையை விட்டு கீழே இறங்கி விஜய் சேதுபதியிடம் சென்றார். பின்னர் அவரை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தின் ஷுட்டிங்கின் போது விஜய்க்கு முத்தம் கொடுத்தார்.

ரசிகர்கள் குஷி
அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகர் விஜய், விஜய் சேதுபதியிடம் இருந்து பெற்ற முத்தத்தை நேற்று நடைபெற்ற மாஸ்டர் பட இசை வெளியிட்டு விழாவில் திரும்பக் கொடுத்தார். இந்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.