சைக்கிளில் ரெய்டு விட்ட கையோடு ஜார்ஜியா புறப்பட்ட விஜய்.. திணறடிக்கும் வீடியோ.. தெறிக்கும் டிவிட்டர்!

சென்னை: நடிகர் விஜய் தளபதி 65 படத்திற்காக ஜார்ஜியா புறப்பட்ட வீடியோக்களும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.

Recommended Video

நடிகர் விஜய் Cycle பயணத்தை அரசியலாக்க வேண்டாம் | Kushboo Pressmeet, Thalapathy Vijay

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 65வது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் நடிகைகள் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை சன்டிவி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஜார்ஜியா பயணம்

ஜார்ஜியா பயணம்

அந்த போட்டோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இப்படம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அதாவது தளபதி 65 படத்திற்காக நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் ஜார்ஜியா புறப்பட்டுள்ளனர்.

இரவோடு இரவாக

இரவோடு இரவாக

நேற்று தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய். அவர் சைக்கிளில் வந்த விவகாரம் பெரும் அரசியலாக்கப்பட்ட நிலையில் நேற்று இரவே படக் குழுவினருடன் ஜார்ஜியா புறப்பட்டுள்ளார் விஜய்.

விமான நிலையத்தில் விஜய்

விமான நிலையத்தில் விஜய்

சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜய் மாஸ்க் அணிந்தப்படி செல்லும் வீடியோக்களும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது. விஜய் ஜார்ஜியா செல்லும் வீடியோக்களையும் போட்டோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் செம குஷியாகியுள்ளனர்.

ரசிகர் வாழ்த்து

#Thalapathy65 என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் விஜய்யின் ஏர்போர்ட் வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர். விஜய் ஜார்ஜியா செல்லும் வீடியோவை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், பை பை.. தளபதி 65 குழுவுக்கு வாழ்த்துகள்.. பாதுகாப்பான பயணத்திற்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

சேஃபா போயிட்டு வாங்க

மற்றொரு நெட்டிசனான இவர் #Thalapathy65 ஹேஷ்டேக் ட்ரென்டிங்கில் உள்ளது. தலைவா சேஃபா ஷூட்டிங் முடிச்சுட்டு வாங்க.. என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X