பனையூரில் ரசிகரை தூக்கியதும் விளம்பரத்திற்காகவா?மாற்றுத்திறனாளி சொன்ன தகவல்!
சென்னை : பனையூரில் நடிகர் விஜய் மாற்றித்திறனாளி ரசிகரை தூக்கியது விளம்பரத்திற்காக தான் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் வாரிசு. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், சங்கீதா, பிரகாஷ் ராஜ், பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

வாரிசு வித்தியாசமான கதை
தளபதி விஜய் நடிக்கும் வழக்கமான கதைப்போல் இல்லாமல், சற்று வித்தியாசமாக கதை அம்சத்தைக் கொண்ட கதையாக இப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திலிருந்து வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே, தீ தளபதி ஆகிய பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

எப்போது இசைவெளியீட்டு விழா?
இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் இறுதியில் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளதாகவும்,இவ்விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சை கேட்க ஏராளமான ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.மாஸ்டர் படத்திற்கு பிறகு இந்த படத்தில் இசை வெளியீட்டில் விஜய் பேச இருப்பதால், இசை வெளியீட்டு விழாவின் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

ரசிகர்களை சந்தித்தார்
வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவல் வெளியானதில் இருந்தே வாரிசா? துணிவா? என்ற டாப்பிக் இணையத்தில் டிராண்டாகி வரும் நிலையில், நடிகர் விஜய் சமீபத்தில் பனையூர் விஜய் ரசிகர் மன்ற அலுவலகத்தில் இரண்டாவது முறையாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தக்கொண்டார்.

விளம்பரத்திற்காகவா?
அப்போது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தன்னுடைய கையில் தூக்கி வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகின. மேலும், வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காத்தான் விஜய் இப்படி எல்லாம் விளம்பரம் செய்து வருகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தன.

இந்த நாளை மறக்கவே மாட்டேன்
இந்நிலையில், விஜய் தூக்கிய அந்த மாற்றித்திறனாளி பிரபாகரன் அளித்துள்ள பேட்டியில், நான் தளபதியுடன் புகைப்படம் எடுக்க சென்ற போது, என் நண்பர்கள் என்னை தூக்கி சென்றனர். இதைப்பார்த்த விஜய் என்னை நலம் விசாரித்து, என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள் என்றார். என்னை அவரே தூக்கிவைத்துக்கொண்டார். இதை என் வாழ்நாளில் என்றும் மறக்கவே மாட்டேன்.

உண்மையான அன்பு
விஜய் தொட்ட அந்த வெள்ளை சட்டையை இதுவரை நான் கழட்டவே இல்லை, விஜய்யை ஒருமுறையாவது பார்க்க மாட்டேனா என ஏங்கி இருந்த எனக்கு அவர் கைகளில் தூக்கி பேரின்பத்தை கொடுத்துவிட்டார் என உணர்ச்சி பெருக்குடன் மாற்றுத்திறனாளி பிரபாகர் பேசினார். அவர் பேசிய இந்த வீடியோவையும் விஜய்யின் ரசிகர்கள் வைரலாக்கி தளபதியின் உண்மையான அன்பைக்கூட விளம்பரத்திற்காக என்று சொல்கிறார்கள் என புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications