'LEO': லியோ படத்தின் அடுத்த அப்டேட்.. சென்னை சூட்டிங் எப்ப துவங்குது தெரியுமா?
சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் லியோ. விஜய் -லோகேஷ் காம்பினேஷனில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
காஷ்மீரில் தொடர்ந்து 50 நாட்களாக நடைபெற்ற இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.
படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை சரியான இடைவெளிகளில் படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய்யின் லியோ படம்
நடிகர் விஜய், த்ரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. விஜய்யின் 67வது படமாக லியோ மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், கடந்த மாதத்தில் இதன் டைட்டில், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்ட படக்குழு காஷ்மீர் சூட்டிங்கிற்கும் தனி விமானத்தில் புறப்பட்டு சென்றது.

காஷ்மீர் சூட்டிங்
இதன் வீடியோக்கள், புகைப்படங்கள் என அடுத்தடுத்து வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில், தொடர்ந்து காஷ்மீரில் 50 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய படக்குழுவினர், தற்போது சிறிது இடைவெளி விட்டுள்ளனர். தொடர்ந்து ஐதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் மொத்த சூட்டிங்
ஆனால் ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடத்தப்படாது என்றும் சென்னையிலேயே மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மார்ச் 29ம் தேதி துவங்குவதாக திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 4ம் தேதி துவங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தற்போது அதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்தடுத்த அப்டேட்கள்
லியோ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். படத்தின் டைட்டில் உள்ளிட்டவை அறிவிப்பதற்கு முன்பு, எந்த அப்டேட்டையும் தெரிவிக்காமல் ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்தது படக்குழு. ஆனால் கடந்த மாதத் துவக்கத்தில் டைட்டில், நடிகர், நடிகைகள் என அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட பின்பு, காஷ்மீரிலிருந்தும் சூட்டிங் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

அடுத்தடுத்த வீடியோக்கள்
காஷ்மீர் சூட்டிங்கை நிறைவு செய்து சென்னை வந்த படக்குழுவினர், காஷ்மீரில் மிகுந்த குளிருக்கிடையில் எவ்வளவு சிரமத்திற்கிடையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்பதையும் வீடியோக்கள் மூலம் வெளியிட்டது. தொடர்ந்து சிறப்பாக ஒத்துழைப்பு தந்த படக்குழுவினருக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அடுத்தடுத்து விஜய்யின் லுக் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு படக்குழுவினர் மாஸ் காட்டினர்.

விஜய் -த்ரிஷா ஜோடி
நீண்ட காலங்களுக்கு பிறகு லியோ படத்தில் விஜய் -த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளனர். இதேபோல முதல்முறையாக விஜய் இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளார். படத்தில் விஜய்யுடன் 6 வில்லன்கள் மோதவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல படத்தின் அதிகமான காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளதும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தன்னுடைய படங்களில் அதிகமான நடிகர்களை வைத்து வேலை வாங்குவார் லோகேஷ். அதே வழிமுறை இந்தப் படத்திலும பின்பற்றப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











