நாளைக்கு தளபதி 67 அறிவிப்பு வீடியோ கன்பார்ம்.. உறுதிப்படுத்திய சாண்டி மாஸ்டர்!

சென்னை : நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அறிவிப்புடன் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை த்ரிஷா, விஜய்யுடன் மீண்டும் தளபதி 67 படம் மூலம் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் பூஜை புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய்யின் வாரிசு படம்

நடிகர் விஜய்யின் வாரிசு படம்

நடிகர் விஜய்யின் வாரிசு படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தின் வசூல் சர்வதேச அளவில் மிரட்டி வருகிறது. படம் ஏறக்குறைய 300 கோடி ரூபாய் வசூலை எட்டவுள்ளது. இந்தப் படம் பேமிலி சென்டிமெண்டுடன் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது.

உண்மையான வாரிசு

உண்மையான வாரிசு

படத்தில் ஒருவரின் உண்மையான வாரிசு எத்தகைய பலத்துடன், அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்வகையில் இருக்க வேண்டும் என்ற கான்செப்ட்டை கதைக்களமாக எடுத்துக் கொண்டு, அதை சிறப்பான வகையில் படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி. படத்தின் நீளம் உள்ளிட்டவை படத்திற்கு நெகட்டிவ்வாக அமைந்தாலும் படம் விஜய் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

தளபதி 67 பட அறிவிப்பு

தளபதி 67 பட அறிவிப்பு

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தின் அறிவிப்பும் கடந்த 30ம் தேதி அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு மற்றும் இயக்குநரிடமிருந்து வெளியாகியுள்ளது. தொடர்ந்து படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் குறித்த அப்டேட்டும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

விஜய்யுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா

விஜய்யுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா

படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை த்ரிஷா விஜய்க்கு ஜோடியாகியுள்ளார். படத்தில் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின் என நட்சத்திர பட்டாளமே விஜய்யுடன் இணைந்துள்ளது. இவர்களின் போஸ்டர்கள் மற்றும் படம் குறித்த அவர்களது மகிழ்ச்சி என அடுத்தடுத்து வெளியானது.

நாளை அறிவிப்பு வீடியோ

நாளை அறிவிப்பு வீடியோ

இந்நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ நாளைய தினம் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லோகேஷின் விக்ரம் படத்திற்கு சிறப்பாக அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அதே பாணியில் தளபதி 67 படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகவுள்ளது.

 சாண்டி மாஸ்டர் உறுதி

சாண்டி மாஸ்டர் உறுதி

இந்தத் தகவலை படத்தில் இணைந்துள்ள சாண்டி மாஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப் படுத்தியுள்ளார். முன்னதாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகப்பதிவிட்ட சாண்டி, தற்போது அறிவிப்பு வீடியோ குறித்தும் அப்டேட் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் சூட்டிங்

காஷ்மீரில் சூட்டிங்

இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக தற்போது படக்குழுவினர் காஷ்மீரின் ஸ்ரீநகரில் முகாமிட்டுள்ளனர். முன்னதாக கொடைக்கானலில் படத்தின் சூட்டிங் மிஷ்கின், சாண்டி உள்ளிட்டவர்களுடன் நடந்து முடிந்த நிலையில், தற்போது காஷ்மீரில் நடைபெற்றுவரும் சூட்டிங்கிற்காக த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் தனி விமானத்தில் ஸ்ரீநகர் சென்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X