Actor Vijay: இப்போ தானே யங் லுக்கில் இருந்தார்.. மீண்டும் ஓல்டு கெட்டப்புக்கு மாறிய விஜய்!
சென்னை: நடிகர் விஜய்யின் தனது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங், டப்பிங் பணிகள் மற்றும் டீ ஏஜிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த சில தினங்களாக அவர் வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் இருந்த நிலையில் இன்றைய தினம் சென்னை திரும்பியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வீடியோக்களில் நடிகர் விஜய் மிகவும் தளர்வாக காணப்பட்டதை பார்க்க முடிந்தது. வெளிநாட்டிலிருந்து திரும்பிய சில மணி நேரங்களிலேயே கள்ளக்குறிச்சிக்கும் சென்று பாதிக்கப்பட்டவர்களை அவர் நேரில் சந்தித்ததால் உண்டான களைப்பு காரணமாக இருக்குமா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய்: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங். டப்பிங் வேலைகள் என அனைத்தையும் நிறைவு செய்துள்ள நடிகர் விஜய், கடந்த சில தினங்களாக வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் சென்னை திரும்பியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 36க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதே போல நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் சென்னை வந்து சில மணி நேரங்களிலேயே கள்ளக்குறிச்சிக்கு விஜய் பயணம் ஆனார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
விஜய் ஆறுதல்: இந்த நிகழ்வின் போது தன்னை காப்பாற்று தலைவா என்று ரசிகர் ஒருவர் கூறியதை பார்க்க முடிந்தது. இதே போல சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவரின் மனைவியும் விஜய்யின் காலில் விழுந்து தன்னுடைய கணவனை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டதையும் அவரை கட்டியணைத்து விஜய் ஆறுதல் கூறியதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் அவர் இந்த நிகழ்வின்போது மிகவும் தளர்வாக காணப்பட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் அடுத்தடுத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங்கின்போது ரசிகர்களை சந்தித்து தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்திருந்தார். இதன்போது அவர் மீசை இல்லாமல் மிகவும் யங் லுக்கில் இருந்தார்.
தளர்வாக காணப்பட்ட விஜய்: இந்நிலையில் இன்றைய தினம் விஜய் மிகவும் தளர்வாக ஓல்ட் கெட்டப்பில் காணப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதை பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் சோர்வடைந்தனர். ஆயினும் அவரை அவர்கள் பின் தொடர்ந்து சென்றதையும் பார்க்க முடிந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய் தொடர்ந்து மருத்துவர்களிடமும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அங்கிருந்து அவர் கிளம்பிய நிலையில் அவரது காரை தொடர்ந்து அவரது ரசிகர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்ததை பார்க்க முடிந்தது.
பிறந்தநாள் கொண்டாடுவாரா?: இதனால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முன்னதாகவே போலீசார் செய்திருந்தனர். நாளை மறுநாள் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரவுள்ள சூழலில் அதற்கான பல விஷயங்களை அவரது ரசிகர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் பிறந்தநாளுக்கு முன்னதாக நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்துள்ளார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு வந்த நிலையில் ரசிகர்கள் அவரை பார்க்கும் படியான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நிகழ்வையொட்டி விஜய் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











