twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரி விலக்கு விவகாரம்.. தீர்ப்பை எதிர்த்து.. அப்பீல் செய்கிறாரா நடிகர் விஜய்? தீயாய் பரவும் தகவல்!

    |

    சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கில் நீதிபதியின் கருத்தை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Recommended Video

    Seeman Advice To Vijay | அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது | Oneindia Tamil

    தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். உலகம் முழுக்க தமிழ் பேசும் கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

    இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்திருந்தார். இதற்கு ஏற்கனவே வரி செலுத்திய நடிகர் விஜய் வரி விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    கடுமையாக சாடிய நீதிபதி

    கடுமையாக சாடிய நீதிபதி

    இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம், நடிகர் விஜய்யை கடுமையாக சாடினார். ரீல் ஹீரோவாய் இருக்க கூடாது, ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும் வரி என்பது நன்கொடையல்ல கட்டாய பங்களிப்பு என்றும் கூறியிருந்தார்.

    விஜய்க்கு அபராதம்

    விஜய்க்கு அபராதம்

    மேலும் சரமாரியாக அட்வைஸ்களை கூறிய நீதிபதி சுப்பிரமணியம் நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்து ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    வைரலான ரசீது

    வைரலான ரசீது

    விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாய் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் 2012ஆம் ஆண்டு விஜய் வரி செலுத்திய ரசீதையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

    விஜய் மேல் முறையீடு?

    விஜய் மேல் முறையீடு?

    அதேநேரத்தில் விஜய்க்கு எதிராகவும் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். கோடிகளில் சம்பாதிக்கும் விஜய் வரி விலக்கு கேட்பது ஏன் என்றும் விளாசினர். இந்நிலையில் ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக நடிகர் விஜய் மேல் முறையீடு செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நீதிபதிக்கு எதிராக

    நீதிபதிக்கு எதிராக

    வரி விலக்கு கோருவது குடிமக்களின் உரிமை, அப்படியிருக்கும் போது இவ்வளவு கடுமையான கருத்துக்களை கூறி நீதிபதி விமர்சித்திருக்க தேவையில்லை. இந்நிலையில் தன்னை கடுமையாக விமர்சித்த நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக நடிகர் விஜய் மேல் முறையீடு செய்து இதனை சட்டப்படி எதிர்கொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

    English summary
    Sources says Actor Vijay may appeal against High court judge who delivered harsh comments on him in Rolls Royce issue. High court imposed penalty against vijay in the duty exemption petition.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X