Actor Vijay: விஜய்யுடன் ரொமான்ஸ் செய்ய தயாராகும் மீனாட்சி சவுத்ரி.. எப்ப சூட்டிங் தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் The greatest of all time படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கை வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க உள்ள விஜய் அந்த படத்துடன் நடிப்புக்கு முழுக்குப்போட உள்ளதாக அறிவித்துள்ளார். தன்னுடைய அரசியல் என்ட்ரியை அறிவித்துள்ள விஜய், தளபதி 69 படத்தை தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது வெங்கட் பிரபு படத்தில் நடித்துவரும் விஜய்யின் தளபதி 69 படத்தினை பிரபல தெலுங்குப்பட நிறுவனமான டிவிவி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. தன்னுடைய அரசியல் திட்டங்களுக்கு பாதிப்பு இல்லாதவகையில் அவர் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் GOAT படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து நடந்து வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு பாடல் காட்சியை படமாக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அரசியல் என்ட்ரி குறித்த அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடித்து முடித்துவிட்டு அத்துடன் சினிமாவிற்கு குட்பை சொல்ல உள்ளதாக அறிவித்துள்ளார். அடுத்ததாக தளபதி 69 படம் டிவிவி பிலிம்ஸ் சார்பில் உருவாக உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது உருவாகி வரும் The greatest of all time படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையுள்ளது.

GOAT படம்: GOAT படத்தின் அடுத்தடுத்து பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் என ஒவ்வொன்றாக திட்டமிட்டு நடத்தி வருகிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையை ஒட்டி நடந்து வருகிறது. படத்தில் நடிகர் விஜய் உடன் மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ள நிலையில் அப்பா கேரக்டருக்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் மேலும் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, மோகன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
ரொமாண்டிக் பாடல் காட்சி: இந்த படத்தில் மகன் விஜய் கேரக்டருக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தில் அவரை இளமையாக காட்ட படக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் மார்ச் 1ஆம் தேதி இந்த படத்தின் அடுத்த கட்ட ஷெட்யூல் சென்னையில் துவங்க உள்ளது. நடிகர் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து ரொமான்ஸ் செய்யும் பாடல் காட்சி அந்த நாளில் படமாக்கப்பட உள்ளது. இதற்கான செட் வேலைகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சில தினங்கள் இந்த படத்தின் இந்த பாடல் காட்சியின் சூட்டின் நடக்க உள்ள நிலையில் அடுத்தடுத்த இடங்களில் சூட்டிங்கை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ரஷ்யா செல்லும் GOAT டீம்: தொடர்ந்து GOAT படக்குழுவினர் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக ரஷ்யா செல்லவும் திட்டமிட்டுள்ளனர். மாஸ்கோவின் தொடர்ந்து 35 நாட்கள் அடுத்தக்கட்ட சூட்டிங்கையும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் ரிலீஸ் குறித்தும் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் கதைக்களம் டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், விஜய்யை வித்தியாசமாகவும் மாஸாகவும் காண்பிக்கும் வகையில் திரைக்கதையை வெங்கட் பிரபு அமைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











