அட்லியை அலுவலகத்தில் சந்தித்தார் விஜய்... தயாராகிறதா நெக்ஸ்ட் பிளாக்பஸ்டர் !

சென்னை : இயக்குனர் அட்லி மற்றும் விஜய் இணைந்து இதுவரை மூன்று பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்ததைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் இணைவார்களா என எதிர்பார்த்து வந்த நிலையில் இப்பொழுது சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

பிகில் திரைப்படத்தை தொடர்ந்து இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார் என்ற செய்தி சமூகவலைதளங்களில் வெளியானதை அடுத்து இந்திய அளவில் பலரது கவனத்தையும் அட்லி ஈர்த்துள்ளார்.

இந்த நிலையில் தளபதி விஜய் அட்லியின் அலுவலகத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த வீடியோ ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது.

வெற்றிக் கூட்டணி

வெற்றிக் கூட்டணி

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் கூட்டணி மிகப் பிரபலமாக பேசப்பட்டு வரும் நிலையில் இயக்குனர் அட்லி மற்றும் தளபதி விஜய் கூட்டணி இன்று வரை அசைக்க முடியாத வெற்றிக் கூட்டணியாக இருந்து வருகிறது.

தரமான வசூல் வேட்டை

தரமான வசூல் வேட்டை

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்த அட்லி, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்த இரண்டாவது திரைப்படத்திலேயே விஜய்யுடன் இணைந்து தெறி திரைப்படத்தை இயக்கி தரமான வசூல் வேட்டையை ஆரம்பித்தார்.

மூன்று வேடங்களில்

மூன்று வேடங்களில்

முதல் முறை விஜய் உடன் இணைந்த திரைப்படமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டடித்த நிலையில் இரண்டாம் முறை விஜய்யை மூன்று வேடங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்த அட்லிக்கு மற்றுமொரு பிளாக்பஸ்டர் மூவியாக மெர்சல் அமைந்தது.

மாஸா க்ளாஸா

மாஸா க்ளாஸா

விஜய்யின் தீவிர ரசிகரான அட்லி விஜய்யை எந்த மாதிரி எல்லாம் திரையில் காண வேண்டுமோ அந்த அளவிற்கு மாஸா க்ளாஸா தனது திரைப்படங்களில் காட்டி வர, மூன்றாவது முறையாகவும் பிகில் திரைப்படத்தில் இந்தக் கூட்டணி இணைய தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படம் வரலாறு காணாத அளவிற்கு வசூல் மழையை பொழிந்ததோடு பிகில் மைக்கல் மற்றும் ராயப்பன் வேடங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கார் ஏறும் வீடியோ

கார் ஏறும் வீடியோ

இவ்வாறு விஜய்க்காகவே கதைகளை பார்த்து பார்த்து செதுக்கி உருவாக்கும் அட்லி அலுவலகத்திற்கு தளபதி விஜய் இப்பொழுது சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளர். அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியில் வந்து கார் ஏறும் வீடியோ இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வைரலாகி வர ரசிகர்கள் பலரும் மற்றுமொரு நற்செய்தியை அட்லிடம் இருந்து வரும் என எதிர் பார்த்து இருக்கின்றனர்.

ஹேஸ்டாக் ட்ரெண்டாகி

ஹேஸ்டாக் ட்ரெண்டாகி

மேலும் விஜய் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை 28 ஆண்டுகள் ஆகின்றதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இதை கொண்டாடி வர #28yearsofvijayism என்ற ஹேஸ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X