தெலுங்கானா முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு…என்னவா இருக்கும்!
ஐதராபாத் : நடிகர் விஜய் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்தார்.
தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இல்லாத இப்படத்தில் பெருமாளும் சென்டிமெண்ட் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

பீஸ்ட்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். முதலில் திரையரங்குகளில் ரிலீஸான இந்த திரைப்படம், இப்போது நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களிலும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

சென்டிமென்ட்
அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். குடும்ப சென்டிமென்ட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் நடிக்க உள்ளனர். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். மேலும், சரத்குமார், பிரபு, ஷாம், சங்கீதா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக்
தளபதி 66 தமன் இசையமைக்க உள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான தமன் முதல்முறையாக அவரது படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதனால் இப்படத்தின் பாடல்கள் வேற லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகயுள்ளது. இதில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

திடீர் சந்திப்பு
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், தளபதி விஜய் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ், விஜய்க்கு சால்வை அணிவித்து வீணை ஒன்றை நினைவு பரிசாக அளித்தார். இந்த சந்திப்பின் போது, ராஜ்யசபா உறுப்பினர் ஜோகினா பள்ளி சந்தோஷ் குமார் உடனிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது, இந்த திடீர் சந்திப்புக்கு காரணம் என்னவா இருக்கும் என்றும் ரசிகர்கள் மூளையை கசச்சிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











