Actor Vijay: மகாராஜா பட இயக்குநரை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன விஜய்.. நிதிலன் சொன்ன விஷயம்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் கடந்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. குரங்கு பொம்மை என்ற சிறப்பான படத்தை கொடுத்திருந்த நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படம் இரண்டாவது படமாக வெளியாகியுள்ளது.
தன்னுடைய அழுத்தமான கதைக்களம் மற்றும் திரைக்கதையால் மகாராஜா படத்திற்கு வெயிட் ஏற்றியுள்ளார் நிதிலன் சாமிநாதன். இந்நிலையில் இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. கடந்த 12ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.

மகாராஜா படம்: நடிகர் விஜய் சேதுபதி, நட்டி நட்ராஜ், மம்தா மோகன்தாஸ், அபிராமி, சிங்கம்புலி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து, மிகப்பெரிய ஹிட்டாக மாறியுள்ளது. படம் 100 கோடி கிளப்பில் இணைந்து மாஸ் காட்டிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, நம்பர் ஒன் இடத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்தப் படம் தொடர்ந்து அழுத்தமான கதைக்களத்தால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இயக்குநர் நிதிலன் சாமிநாதன்: முன்னதாக குரங்கு பொம்மை படம் மூலம் கோலிவுட்டின் பார்வையை தன்பக்கம் திரும்ப செய்த நிதிலன் சாமிநாதன், 6 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஜா படத்தை கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பும் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படம் தொடர்ந்து ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் அதிகமான பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான மகாராஜா படம் அவரது கேரியர் பெஸ்ட்டாகவும் அமைந்துள்ளது. நான் லீனியர் பாணியில் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார் நிதிலன் சாமிநாதன்.

படக்குழுவினரை பாராட்டிய விஜய்: இந்நிலையில் இந்தப் படத்தை பார்த்த நடிகர் விஜய், நிதிலன் சாமிநாதன் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிதிலன் சாமிநாதன், இந்த சந்திப்பிற்கு தன்னுடைய மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ள நிதிலன் சாமிநாதன், நேரில் சந்தித்தபோது மகாராஜா படம் குறித்து விஜய்யின் கருத்துக்கள் தன்னை மிகப்பெரிய ஆச்சர்ய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக கூறியுள்ளார்.
நிதிலன் சாமிநாதன் நெகிழ்ச்சி: மகாராஜா படம் குறித்த விஜய்யின் பாராட்டுக்கள் மிகப்பெரியது என்றும் நிதிலன் தெரிவித்துள்ளார். விஜய்யின் அன்பு, ஆதரவு மற்றும் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள நிதிலன், லவ் யூ அண்ணா என்றும் கூறியுள்ளார். மேலும் மகாராஜா படத்தின் தயாரிப்பாளர்களான சுதன் மற்றும் ஜெகதீஷிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











