Vijay: ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு!
சென்னை: நடிகர் விஜய் தற்போது தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் கடந்த மாதம் பூஜையுடன் துவங்கி சில தினங்கள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் சென்னையில் ஆபீசர் அகாடமியில் நடந்து வருகிறது. தற்போது படத்தில் 2வது கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அரசியல் கதைக்களத்தில் தளபதி 69 படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இயக்குனர் ஹெச் வினோத் படத்தை சிறப்பாக கொடுக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளார். படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்துவரும் நிலையில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. படம் ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான கொண்டாட்டத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதத்தில் பூஜையுடன் துவங்கப்பட்டு முதல் கட்ட சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டது. இதையடுத்து தன்னுடைய தவெக அரசியல் மாநாட்டில் பிஸியாகிவிட்டார் நடிகர் விஜய். இந்த மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் தளபதி 69 படத்தின் 2வது கட்ட ஷூட்டிங்கில் அவர் இணைந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் ஆபீசர் அகாடமியில் துவங்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
தளபதி 69 படம்: ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து உருவாக்கும் இந்த அகாடமியில் விஜய்யின் தளபதி 69 பட சூட்டிங் நடந்துவரும் நிலையில் படத்தில் ராணுவம் சம்பந்தமான காட்சிகள் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கு பயிற்சி கொடுத்துவரும் ராணுவ அதிகாரிகள் விஜய்யை தங்களது குடும்பத்தினர் சந்திக்க எண்ணிய நிலையில் உடனடியாக ராணுவ வீரர்களை சந்திக்க விஜய் சென்றபோது அவருக்கு மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

ராணுவ வீரர்களை சந்தித்த விஜய்: ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்த விஜய் அவர்களுடன் கைக்குலுக்கி தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் அவர்களுடனும் அவரது குடும்பத்தினருடனும் இணைந்து அடுத்தடுத்து புகைப்படங்களையும் செல்ஃபிக்களையும் எடுத்துக்கொண்டார். குறிப்பாக ராணுவ வீரர்களின் குழந்தைகளுடன் அவர் அதிகமான நேரத்தை செலவழித்தார். முன்னதாக துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய் ராணுவ வீரராக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. தன்னுடைய விடுமுறைக்காக வீட்டிற்கு வரும் ராணுவ வீரர் அந்த குறுகிய இடைவெளியிலும் நாட்டின் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயல்படுவதாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது.

ராணுவ வீரராக விஜய் நடித்த துப்பாக்கி: துப்பாக்கி படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்த நிலையில் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. விஜய்யை ராணுவ வீரராக பார்க்க அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆர்வம் காட்டியதை பார்க்க முடிந்தது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மழை, வெயில் பணி என எவற்றையும் பார்க்காமல் எல்லைகளில் போராடிவரும் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடன் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வரும் அவரது குடும்பத்தினர் குறித்து தற்போது சில தினங்களுக்கு முன்பு வெளியான அமரன் படமும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளது. முன்னதாக விஜய்யின் துப்பாக்கி படமும் இதை மிகவும் நெகிழ்ச்சியான வகையில் காட்சிப்படுத்தியது. இந்நிலையில் ராணுவ வீரர்களுடன் தனது நேரத்தை விஜய் செலவழித்தது ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











