Actor Vijay: மீண்டும் ரசிகர்களை சந்தித்த விஜய்.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி அடுத்தடுத்து கோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பேசுபொருளாகி உள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் ஏறக்குறைய 200 கோடி ரூபாய் சம்பளமாக விஜய் பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய கடைசி படம் என விஜய் முன்னதாக அறிவித்திருந்த தளபதி 69 படத்திலும் அவர் 200 கோடி ரூபாய்களை சம்பளமாக பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ள நிலையில் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னுடைய நடிப்பின்மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறார் நடிகர் விஜய். இவர் நடிப்பை விட்டுவிட்டு முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கவுள்ளது அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டு செய்துள்ளது. இருந்தபோதிலும் நீண்ளட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவ்வப்போது சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களையும் சந்தித்து வருகிறார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இளைய தளபதியாக ரசிகர்களை கவர்ந்து வந்த அவர் தற்போது தளபதியாகவும் கொண்டாடப்படுகிறார். விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல நற்பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் நீண்ட காலங்களாகவே அவரது அரசியல் பிரவேசம் குறித்து பல செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய கட்சி குறித்த அறிவிப்பை அவர் மேற்கொண்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
GOAT படம்: கடந்த ஆண்டில் விஜய்யின் லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் 600 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்தது. இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் அவர் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு கேரக்டர் நெகட்டிவ் ஷேடில் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் மகன் கேரக்டருக்காக டீ-ஏஜிங் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரசிகர்களை சந்தித்த விஜய்: இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கின்போது அடுத்தடுத்து ரசிகர்களை விஜய் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்றும் GOAT படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் ஏராளமான ரசிகர்களை சந்தித்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் விஜய். இந்த சந்திப்பின்போது விஜய்யின் மீசை, தாடியில்லாத லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த லுக் படத்தில் அவரது மகன் கேரக்டருக்கானது என்பது தெரியவந்துள்ளது. அவரை நேரில் பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர்.
நடிப்புக்கு முழுக்கு: தற்போது GOAT படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். ஏராளமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் அரசியலில் நுழைந்து தங்களை வெளிப்படுத்தி வந்துள்ளனர். இருந்தபோதிலும் தங்களது அரசியல் பிரவேசத்திற்கு நடிப்பையும் ஒரு ஆயுதமாகவே அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தான் பீக்கில் இருக்கும்போதே நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துள்ள நிலையில், சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். அவர் இந்த முடிவை கைவிட்டு சினிமாவையும் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











