ஷாருக்கான் போல நீலாங்கரை வீட்டில் மாஸ் காட்டிய விஜய்.. வேறலெவலில் டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: விஜய் படங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வந்தால் மட்டுமே நடிகர் விஜய்யை காண முடியும் என்கிற சூழல் இருந்து வந்த நிலையில், தற்போது அது எல்லாம் மாறி அடிக்கடி ஆஃப் ஸ்கிரீனில் நடிகர் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வருகிறார் என்பதே ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயமாக உள்ளது.
கடந்த மாதம் ஜூன் 28-ம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தொகுதிவாரியாக தேர்வு செய்து பரிசுகளை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வழங்கினார்.

அதன் இரண்டாம் கட்ட கல்வி விருது விழா கடந்த ஜூலை 3ம் தேதி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மாணவர்களுக்கு பரிசு வழங்கி அவர்களுடன் நேரத்தையும் செலவிட்டார். இந்நிலையில், தளபதி விஜய்யை காண ரசிகர்கள் அவரது வீட்டுக்கு முன்பாக குவிந்திருந்த நிலையில், ரசிகர்களை சந்தோஷப்படுத்த விஜய் செய்த செயல் வீடியோவாக தற்போது டிரெண்டாகி வருகிறது.
அரசியல் தலைவர்: இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனான விஜய் அப்பா இயக்கத்தில் சினிமாவில் அறிமுகமான நிலையில், தனது கடின உழைப்பால் தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கி இளைய தளபதியாகவும் தளபதியாகவும் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளார். அடுத்ததாக அரசியலில் களம் இறங்க முடிவு செய்த நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து அதன் தலைவராக மாறியுள்ளார்.
கல்வி தான் முக்கியம்: கடந்தாண்டு நடைபெற்ற தளபதி விஜய் கல்வி விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய் அசுரன் படத்தில் இடம்பெற்ற வசனத்தை குறிப்பிட்டு கல்விதான் முக்கியம் என்பதை சுட்டிக் காட்டினார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வு தமிழக மாணவர்களை எந்த அளவுக்கு பாதிக்கிறது. அந்தப் பிரச்சனையை சமாளிக்க நிரந்தர தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு உள்ளிட்டவைகள் பற்றி தனது கருத்தை விஜய் வெளிப்படுத்தினார். மேலும், கல்வியை கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு ஜாலியா படிக்கவும் அட்வைஸ் செய்தார்.
வீட்டு மாடி மீது ஏறி கையசைத்த விஜய்: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது வீட்டின் மாடியில் இருந்து ரசிகர்களுக்கு கையசைத்து நன்றி தெரிவிப்பார். தற்போது அதே போல நடிகர் விஜய் நேற்று 9 மணி நேர நிகழ்ச்சிக்குப் பிறகு எப்படியாவது விஜய் வீடு திரும்பியதும் அவரை சந்தித்தாக வேண்டும் என காத்துக் கிடந்த ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என நினைத்து நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு வந்ததும் வீட்டின் மொட்டை மாடிக்கு வந்த விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்து நன்றி தெரிவித்தார். அதன் வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.
மாநாடு களைகட்டும்: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை சந்தித்து அவர்களை கெளரவித்து, அவர்களை பேசவிட்டு, அவர்களுடன் விளையாடி மகிழ்ந்த நடிகர் விஜய் கோட் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு பிரம்மாண்டமாக நடைபெற உள்ள மாநாட்டில் தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் இதே போல சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 69 படத்தில் விஜய் நடிக்காமல் இப்போதிருந்தே மக்களை சந்திக்க ஆரம்பித்தால் 2026 தேர்தலில் அவருக்கு மக்களின் ஆதரவு அதிகம் கிடைக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











