Vijay: விஜய்யை பார்க்க குவிந்த தெலுங்கு ரசிகர்கள்.. விஜய் என்ன செஞ்சாரு தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் விஜய்யின் போர்ஷன்கள் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது.

தற்போது படத்தின் சூட்டிங் ஆந்திர மாநிலம் தலக்கோணத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங் ஸ்பாட்டில் இளமையான விஜய்யை பார்க்க முடிந்தது.

தலக்கோணத்தில் எடுக்கப்படும் சூட்டிங்கை தொடர்ந்து சில பேட்ச் வேலைகள் மீதமுள்ளதாகவும் அதுவும் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Vijay met his Telugu fans in Leo shooting spot in Thalakonam

விஜய்யை காண கூடிய தெலுங்கு ரசிகர்கள்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜூன் என அதிகமான நட்சத்திரப்பட்டாளங்களுடன் களமிறங்கியுள்ளது லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளனர். படத்திற்கு மேலும் பல சிறப்புகள் காணப்படுகின்றன. படத்தில் வயதான கேங்ஸ்டர் வேடத்தில் விஜய் நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் -த்ரிஷா இணைந்துள்ளனர்.

காஷ்மீரில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 52 நாட்கள் நடத்தப்பட்ட நிலையில், அங்கு கடுமையான குளிருக்கிடையில் படக்குழுவினர் பட்ட கஷ்டங்களை வெளிப்படுத்தும் வகையில் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதில் விஜய்யின் வீடியோவும் இடம்பெற்றிருந்தது. படம் காஷ்மீரை தொடர்ந்து சென்னையில் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், தற்போது படக்குழுவினர் ஆந்திர மாநிலம் தலக்கோணத்தில் சூட்டிங் நடத்தி வருகின்றனர்.

Actor Vijay met his Telugu fans in Leo shooting spot in Thalakonam

விஜய்யின் போர்ஷன்கள் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள நிலையில், தலக்கோணம் சூட்டிங்குடன் அவருடைய போர்ஷன்கள் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து படத்தின் சில பேட்ச் வேலைகளையும் இயக்குநர் லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். இதை தொடர்ந்து ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்து, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் துவங்கவுள்ளது. படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தலக்கோணத்தில் சூட்டிங் நடத்தப்பட்டுவரும் சூழலில் இன்றைய தினம் விஜய்யின் சூட்டிங்கை கேள்விப்பட்டு அவரை பார்க்கும் வகையில் சூட்டிங் ஸ்பாட்டில் ஏராளமான தெலுங்கு ரசிகர்கள் கூடினர். கூட்டத்தை கட்டுப்படுத்துவது படக்குழுவினருக்கு மிகவும் கடினமாக அமைந்தது. இந்நிலையில், அவர்களை பார்க்கும் வகையில் வெளியில் வந்த நடிகர் விஜய், அவர்களை பார்த்து கையசைத்து, புன்னகை செய்தார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

நடிகர் விஜய் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவரது படத்தின் ரைட்ஸ்கள் கூட அதிகமான விலைக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக இந்நிலையில் பக்கத்து மாநிலமான ஆந்திராவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் செல்வாக்கு காணப்படுவது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது. அவரது படங்களுக்கு எப்போதுமே தெலுங்கு ரசிகர்கள் அதிக வரவேற்பை கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X