விஜய்யின் வாரிசு படத்தால் இயக்குனருக்கு வந்த சோதனை..கதையை கேட்டுவிட்டு இழுத்து அடிக்கும் அவலம்!

சென்னை: விஜய் நடித்த வாரிசு படத்திற்கு தெலுங்கில் போதிய வரவேற்பு கிடைக்காததால் அவருக்கு அடுத்த படத்திற்கான வாய்ப்பு இதுவரை அமையவில்லை.

தெலுங்குத் திரைப்பட இயக்குனரான வம்சி பைடிபைலி பிருந்தாவனம் திரைப்படத்தினை இயக்கினார். இந்த படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமானவராக அறியப்பட்டார்.

Actor Vijay movie varisu director vamshi paidipally has no new projects

இதையடுத்து நாகார்ஜுன் கார்த்தி நடித்த தோழா என்ற படத்தை இயக்கினார். இப்படத்திற்கு பிலிம் பேர் விருதை பெற்றார்.

வாரிசு: தளபதி விஜய் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான வாரிசு திரைப்படம் துணிவு படத்திற்கு போட்டியாக பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜூ இப்படத்தை தயாரித்திருந்தார்.

இப்படத்தில் விஜய்யுடன், ராஷ்மிகா,ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

விஜய் நடித்த வாரிசு: தொழிலதிபரான சரத்குமார் கம்பெனியை நடத்தி வருகிறார். தன் குடும்பம், தொழில் என இரண்டையும் பிரித்துப் பார்க்காமல் குடும்பத்தில் இருப்பவர்களையே சொந்தத் தொழிலிலும் ஈடுபடச் செய்து அதில் வெற்றியும் பெறுகிறார் சரத்குமார். இது சரத்குமாரின் கடைசி மகன் விஜய்க்கு பிடிக்காததால் சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுக்கிறார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிறகு தொழில் போட்டியில் சரத்குமாருடைய எதிரிகள் அவரை வீழ்த்த நினைக்கும் போது விஜய் தந்தையை காப்பாற்றுகிறார்.

கடுமையான விமர்சனம்: அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக வந்த இத்திரைப்படம் இந்தி சீரியல் போல இருந்ததாகவும், விஜய்க்கு இது கொஞ்சம் கூட செட் ஆகவில்லை என்று பலவிதமான கருத்துக்கள் இணையத்தில் பரவின. படம் விமர்சனத்திற்கு உள்ளான போதும், கணிசமான வசூலை பெற்றது.

புலம்பும் வம்சி: இந்நிலையில், வம்சி அடுத்து எந்த புது படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பல நடிகர்கள் வம்சியிடம் கதை கேட்டாலும் ஓகே சொல்லாமல், யோசித்து பிறகு சொல்லுவதாக கூறுவதால் அடுத்து என்ன செய்வது என்று வம்சி புலம்பிவருவதாக கூறப்படுகிறது. வாரிசு படம் தெலுங்கில் ரசிகர்களை அதிகம் கவராததால் அவருக்கு அடுத்து வாய்ப்பு கொடுக்க முன்னணி ஹீரோக்கள் தயங்குவதாக சினிமா துறையில் பேச்சு அடிபட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X