AVM Saravanan: கடைசி வரை வராத விஜய்.. AVM சரவணனை கண்ணீரில் வழி அனுப்பி வைத்த திரையுலகம்
சென்னை: தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளர் AVM சரவணன். இவர் இன்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 86. நேற்று தனது 86வது பிறந்த நாளைக் கொண்டாடிய அவர், இன்று இயற்கை எய்தினார். அவரது மறைவு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் வராததது தற்போது கேள்வியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் மூத்தவர்களில் இவரும் ஒருவர். அவரது மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தகவல் கிடைத்ததும் உடனே வந்து அஞ்சலி செலுத்தி விட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதேபோல் AVM சரவணனின் உடலுக்கு அருகில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தார். அதேபோல் மூத்த நடிகர் சிவகுமார், அவரது மகன் சூர்யா என இருவரும் ஒன்றாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இருவரும் கண்ணீர் விட்டு அழுதார்கள். நடிகர் விஷால், இயக்குநர் பார்த்திபன் என மொத்த திரையுலகமும் அஞ்சலி செலுத்த வந்தனர்.

கடைசி வரை வராத விஜய்: இப்படி இருக்கும்போது, நடிகர் விஜயின் அப்பாவும் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கொட்டும் மழையிலும் வந்து அஞ்சலி செலுத்தி சென்றார். அப்படி இருக்கும்போது நடிகர் விஜய் வருவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் நடிகர் விஜய் வராதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூட இரங்கல் குறிப்பு எதுவும் வெளியிடாததும் கேள்விக்குள்ளாகி உள்ளது. ஏவிஎம் தயாரிப்பில் நடிகர் விஜய் வேட்டைக்காரன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











