மே 20ஐ மறக்காத விஜய்.. கண்கலங்க வைக்கும் காரணம்.. குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்யின் அம்மா!

சென்னை : நடிகர் விஜய் கோலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ளார். தற்போது அவரது 66வது படத்தில் நடித்து வருகிறார்.

தன்னுடைய தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தன்னுடைய பெற்றோரை விஜய் சந்திக்காமல் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் தனியார் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் ஒரு குட்டி ஸ்டோரி, ஒரு கர்நாடக பாட்டு என்ற நிகழ்ச்சியில் விஜய் குறித்த முக்கியமான தகவலை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

தளபதி 66 படம்

தளபதி 66 படம்

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தளபதி66 படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குநரும் தமிழில் தோழா என்ற வெற்றிப் படத்தை கொடுத்தவருமான வம்சி படிப்பள்ளி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

படத்தின் இரண்டு கட்ட சூட்டிங், சென்னை மற்றும் ஐதராபாத்தில் நிறைவடைந்துள்ளது. படத்தின் டைட்டில் பாடலுக்காக இந்தப் படத்தில் தற்போது பிரபல நடன இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா இணைந்துள்ளார். படத்தில் சரத்குமார், பிரபு, ஜெயசுதா, ஷாம், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

சென்னை திரும்பிய விஜய்

சென்னை திரும்பிய விஜய்

விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், ஐதராபாத்தில் சூட்டிங் முடித்துவிட்டு தற்போது சென்னைக்கு விஜய் திரும்பியுள்ளார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் ஹாண்ட்சம்மான விஜய்யை பார்த்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பெற்றோரை சந்திக்காத விஜய்

பெற்றோரை சந்திக்காத விஜய்

நடிகர் விஜய், அவரது தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பையொட்டி அவரது பெற்றோர்களை சந்திக்காமல் உள்ளார். சமீபத்தில் இதுகுறித்து அவரது தந்தை சந்திரசேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து விஜய் அவர்களை சந்திக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.

விஜய் குறித்த குட்டி ஸ்டோரி

விஜய் குறித்த குட்டி ஸ்டோரி

இதனிடையே அவரது அம்மாவும் பிரபல கர்நாடக பாடகியுமான ஷோபா சந்திரசேகர் தனியார் ஊடகம் ஒன்றின் யூடியூப் பக்கத்தில் ஒரு குட்டி ஸ்டோரி, ஒரு கர்நாட்டிக் பாட்டு என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார். இதில் அவர் நடிகர் விஜய் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

விஜய் மறக்காத மே 20

விஜய் மறக்காத மே 20

எதை மறந்தாலும் நடிகர் விஜய் மே மாதம் 20ம் தேதியை எப்போதும் மறக்க மாட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நாளில்தான் அவரது மகளும் விஜய்யின் தங்கையுமான வித்யா உயிரிழந்ததாக தெரிவித்த ஷோபா, அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் தான் நினைவுப்படுத்துவேன் என்று கூறினார்.

கண்கலங்கும் விஜய்

கண்கலங்கும் விஜய்

ஆனால் அந்த நாளை தான் மறக்கவில்லை என்று விஜய் தனக்கு பதிலாக சொல்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் விஜய்க்கு ஏராளமான தங்கைகள் இருந்தாலும், அவரது பள்ளி நாட்களிலும் விஜய், தன்னுடைய தங்கை குறித்த நினைவு வந்தால் அழுதுவிடுவார் என்றும் ஷோபா கூறியுள்ளார்.

வித்யாவை மறக்காத விஜய்

வித்யாவை மறக்காத விஜய்

எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் வித்யாவை தானும் விஜய்யும் மறக்க மாட்டோம் என்று கூறிய ஷோபா, இதன் காரணமாகவே விஜய்யின் மகளுக்கு வித்யாவை நினைவுப்படுத்தும்வகையில் திவ்யா என்று பெயர் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். விஜய்யை கண்கலங்க வைக்கும் நிகழ்வை அவர் கூறியுள்ளது அவரது ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X