Vijay joined Instagram: இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்த விஜய்.. அதிகரிக்கும் ஃபாலோயர்ஸ்!

சென்னை: நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். ட்விட்டரில் கடந்த 2013ம் ஆண்டு இணைந்த நடிகர் விஜய் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கி உள்ள நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அதிகம் பின் தொடர்ந்து வருகின்றனர்.

10 வருஷத்துக்கு முன்னாடி

10 வருஷத்துக்கு முன்னாடி

நடிகர் விஜய் தனது பட ப்ரோமோஷன்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பல ஆண்டுகளாக செய்து வருகிறார். அதிகளவில் ட்வீட்களை போடாமல் இருந்தாலும், புதிய படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர்களை வெளியிட்டே ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை அதிகரித்துள்ளார்.

4.4 மில்லியன் ரசிகர்கள்

4.4 மில்லியன் ரசிகர்கள்

2013ம் ஆண்டு நடிகர் விஜய் ட்விட்டரில் இணைந்த நிலையில், அவருக்கு இதுவரை 4.4 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். ட்விட்டர் ஹாஷ்டேக் டிரெண்டிங்கில் தொடர்ந்து இந்தியளவில் நடிகர் விஜய் முன்னிலை வகித்து வருவதும் நடிகர் விஜய் குறித்த தேடுதல் சமூக வலைதளத்தில் அதிகம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் விஜய்

இன்ஸ்டாகிராமில் விஜய்

இந்நிலையில், ட்விட்டரை தொடர்ந்து நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமிலும் அதிகாரப்பூர்வமாக தனது கணக்கை துவங்கி உள்ளார். விஜய் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் குவிந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.

முதல் போஸ்ட்

முதல் போஸ்ட்

காஷ்மீரில் லியோ படப்பிடிப்பில் இருந்த போது அங்கே பனி மலை பேக்கிரவுண்டில் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட செம க்யூட்டான போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முதல் போஸ்ட்டாகவும் தனது ப்ரோபைல் போட்டோவாகவும் நடிகர் விஜய் வைத்துள்ள நிலையில், அவரது அழகை வர்ணித்து ஏகப்பட்ட ரசிகர்கள் எங்கள் தளபதின்னு கமெண்ட் போட்டு வருகின்றனர்.

லைக் போட்டோ லோகேஷ்

லைக் போட்டோ லோகேஷ்

தளபதி விஜய் லியோ படத்தின் போட்டோவை ஷேர் செய்து இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி உள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடனடியாக தனது லைக்கை பதிவு செய்திருக்கிறார். மேலும், ஏகப்பட்ட சினிமா பிரபலங்களே ரசிகர்களாக மாறி விஜய்யின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையான கீர்த்தி சுரேஷ் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த அடுத்த நிமிடமே ஃபாலோயர் ஆகி உள்ளார். மேலும், தனுஷின் வாத்தி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா மேனனும் விஜய்யின் இன்ஸ்டா ஐடியை தற்போது ஃபாலோ செய்துள்ளார். ஏகப்பட்ட நடிகைகள் மற்றும் நடிகர்கள் விஜய்யின் இன்ஸ்டாகிராம் ஐடியை பின் தொடர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X