twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோப்ரா குறித்து அன்றே சொன்னார் விஜய்.. என்ன சொன்னார் தெரியுமா?

    |

    சென்னை : நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது கோப்ரா படம்.

    இந்தப் படத்தின் மேக்கிங், திரைக்கதை உள்ளிட்டவை கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதில் படத்தின் நீளமும் சேர்ந்துள்ளது.

    இந்நிலையில் படத்தின் நீளத்தை 20 நிமிடங்கள் குறைக்கும் நடவடிக்கையை படக்குழு மேற்கொண்டுள்ளது.

    அடப்பாவிங்களா..முழுசா 3 நாள் கூட முடியல.. கோப்ரா முழு படமும் இணையத்தில் கசிந்தது!அடப்பாவிங்களா..முழுசா 3 நாள் கூட முடியல.. கோப்ரா முழு படமும் இணையத்தில் கசிந்தது!

    கோப்ரா படம்

    கோப்ரா படம்

    நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகியுள்ளது கோப்ரா படம். அதிகமான பிரமோஷன்களுடன் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையேயும் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வழக்கம் போல விக்ரம் நடிப்பு மிரட்டலாக அமைந்துள்ளது.

    கலவையான விமர்சனங்கள்

    கலவையான விமர்சனங்கள்

    ஆனால் படத்தின் மேக்கிங், காட்சி அமைப்புகள் மற்றும் திரைக்கதைக்காக இன்னும் அதிகமாக இயக்குநர் அஜய் ஞானமுத்து மெனக்கெட்டிருக்கலாம் என்ற விமர்சனமே அதிகமாக எழுந்துள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என அடுத்தடுதத சிறப்பான வெற்றிக்களங்களில் பயணித்த அஜய் ஞானமுத்து, பெரிய நடிகர் என்பதால் சறுக்கியுள்ளாரா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.

    குறைக்கப்படும் படத்தின் நீளம்

    குறைக்கப்படும் படத்தின் நீளம்

    படத்தின் பிரம்மாண்டத்திலும் விக்ரமின் கெட்டப்பிலும் செலுத்திய அக்கறையை கவனத்தை படத்தின் திரைக்கதையிலும் அவர் செலுத்தியிருக்கலாம் என்பதே ரசிகர்களின் மற்றும் விமர்சகர்களின் கமெண்ட்டாக உள்ளது. மேலும் படத்தின் அதிகப்படியான நீளமும் முதல் நாளிலேயே குறையாக சுட்டிக் காட்டப்பட்டது.

    படங்களின் நீளம் குறித்து விஜய் பேச்சு

    படங்களின் நீளம் குறித்து விஜய் பேச்சு

    இந்நிலையில் இந்தப் படத்தின் அதிகமான நீளம் தற்போது 20 நிமிடங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. எப்போதுமே ஒரு படம் இரண்டரை மணிநேரங்களுக்குள் முடிவதையே ஒவ்வொரு ரசிகரும் விரும்புகின்றனர். இதை முன்னதாகவே நடிகர் விஜய் தனது பட விழா ஒன்றில் கூறியுள்ளது தற்போது வைரலாகியுள்ளது.

    குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டுகோள்

    குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டுகோள்

    அந்த மேடைப் பேச்சில் புதிய இயக்குநர்களுக்கு அவர் ஒரு வேண்டுகோளை விடுக்கிறார். புதிய இயக்குநர்களின் அனைத்து படங்களையும் அவர்களின் புதிய ஐடியாக்களையும் தான் பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார். அவர்கள் நல்ல கதைகளை செய்து வருவதாகவும் ஆனால் இரண்டரை மணிநேரத்திற்குள் அவர்கள் படத்தை முடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொள்கிறார்.

    அதிக நேரம் படமெடுக்கும் பாம்பு தோற்கும்

    அதிக நேரம் படமெடுக்கும் பாம்பு தோற்கும்

    அதற்கு மேல் படம் நீண்டால் ஆடியன்ஸ் படத்தை பார்ப்பதற்கு பதிலாக அவர்களது வாட்சை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் என்றும் பொழுது போக்கு என்பதை மறந்து விட்டு டைம் ஆகிவிட்டதே என்ற பீலிங் அவர்களுக்கு வந்துவிடும் என்றும் விஜய் குறிப்பிடுகிறார். தொடர்ந்து பேசும் அவர் ரொம்ப நேரம் படம் எடுத்தால் பாம்பு கூட கீரியிடம் தோற்று போகும் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    படங்கள் வெற்றி குறித்த விஜய் அறிவு

    படங்கள் வெற்றி குறித்த விஜய் அறிவு

    தற்போது பாம்பை குறிப்பிடும் கோப்ரா படத்தின் நீளமே அதன் முதல் குறையாக கூறப்பட்ட நிலையில், முன்னதாகவே இதுகுறித்து நடிகர் விஜய் பேசியுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவில் விஜய் பேசியுள்ளதன்மூலம் எப்படி அவர் சினிமாவையும் ரசிகர்களின் பல்சையும் சரியாக புரிந்து வைத்திருக்கிறார் என்பதும் வெளிப்பட்டுள்ளது.

    English summary
    Actor Vijay's throwback video about movies length makes fans stunning
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X