நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அசத்தலாய் பங்கேற்ற நடிகர் விஜய்.. யாருடையதுன்னு பாருங்க!

Recommended Video

Vijay in Relative reception | Leela Palace | Thalapathy 64

சென்னை: தனது நெருங்கிய உறவினர் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அசத்தலாய் பங்கேற்ற போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவரும் விஜயின் அத்தை பேத்தியான சினேகாவும் வெளிநாட்டில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் செய்வது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இதுதொடர்பான செய்திகள் நீண்ட நாட்களாக ஊடகங்களில் வெளியான வண்ணம் இருந்தது.

லீலாபேலஸ் ஹோட்டல்

இந்நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் நடிகர் அதர்வாவின் தம்பிக்கும் நடிகர் விஜய் வீட்டு பெண்ணான சினேகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நேற்று இரவு சென்னை லீலாபேலஸ் ஸ்டார் ஹோட்டலில் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

உதவி இயக்குநர்

எஸ்ஏ சந்திரசேகரின் பேத்தியான சினேகா, விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகள் ஆவார். 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார்.

அண்ணனுக்கு கல்யாணம்

இருவரும் காதலித்து வந்த நிலையில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் காதலுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதோடு அண்ணன் அதர்வாவுக்கு திருமணம் நடந்த பிறகு நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆகாஷ் சொன்னதாலும் இருவரின் திருமணத்திலும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

நெருங்கிய நண்பர்கள்

தற்போது நல்லபடியாக பேசி தீர்த்து இருவீட்டாரின் ஒப்புதலுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதர்வா குடும்பத்தினர், சினேகா குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

விஜய் முன்னின்று

விஜய் முன்னின்று

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜயும் கலந்துகொண்டார். வெள்ளை நிற சட்டை, கறுப்பு நிற பேன்ட் அணிந்து அசத்தலாய் இருந்தார் விஜய். விஜய்யே முன்னின்று இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தியதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X