Just In
- 1 hr ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 6 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 7 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன மேட்டரா இருக்கும்…இரண்டுபேர் கையிலும் ஒரே மாதிரி பூனை !
சென்னை : மாஸ்டர் திரைப்படம் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக இருக்கும் நிலையில் இதன் படப்பிடிப்பு புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய்,விஜய் சேதுபதி முதன்முறையாக ஒன்றாக இணைந்து நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி துளிக்கூட நல்லவன் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எதிர்ல வரது எமனா இருந்தாலும் பயப்படக் கூடாது.. பவானிக்கே எமன் யாரு.. வேற யாரு நம்ம தளபதி தான்!
விரைவில் திரையில் இருவரும் மோதிக் கொள்ள இருக்கும் நிலையில் இப்போது ஒரே மாதிரி பூனையை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஓடிடியில் நேரடியாக
பொதுவாக பொங்கலுக்கு குறைந்தது 5 முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில் இந்த வருடம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் மட்டுமே திரையரங்கில் வெளியாக தயாராக உள்ளது பூமி திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்படுகிறது.

ஸ்னீக்பிக் காட்சிகள்
விஜய், விஜய் சேதுபதி என இரண்டு வெறித்தனமான நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்க, மாஸ்டர் படத்தில் வரும் ஸ்னீக்பிக் காட்சிகள் ஒன்றாக வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் கூட்டியுள்ளது.

இந்தியிலும் வெளியிடப்படுகிறது
இன்னும் ஓரிரு வாரங்களில் மாஸ்டர் திரைப்படம் திரையில் வெளியாக இருக்க, இப்போதிலிருந்து ரசிகர்கள் முன்பதிவு டிக்கெட்டை முண்டி அடித்துக் கொண்டு வாங்கிவர, பல தடைகளை தாண்டி வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டுமே வெளியிட முடிவு செய்திருந்த நிலையில் இந்தியிலும் விஜய்யின் மார்க்கெட் உயர்ந்துள்ளதை அடுத்து இந்தியிலும் வெளியிடப்படுகிறது.

வேறு விதமான விஜய்யை
போஸ்டர், டீஸர் என தொடர்ந்து மிரட்டி வரும் மாஸ்டர் படக்குழு இப்பொழுது ஸ்னீக்பிக் வீடியோக்களை வெளியிட்டு தரமான சம்பவத்தை நிகழ்த்தி வர இவை அனைத்தும் சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது. பறக்கும் சண்டைக் காட்சிகள், ரொமான்டிக் காதல் மற்றும் மாஸான காட்சிகள் என அனைத்து அம்சங்களும் மாஸ்டர் திரைப்படத்தில் வழக்கமான விஜய்யாக இல்லாமல் வேறு விதமான விஜய்யை காட்டியுள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வெறித்தனமாக லுக்கு
பொங்கல் ட்ரீட்டாக திரையரங்குகளில் வெளியாகும் மாஸ்டர் திரைப்படத்தை காண பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நடுக்காட்டில் முரட்டு பூனையை கையில் வைத்துக் கொண்டு விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து இப்பொழுது விஜய்யும் அதே மாதிரி பூனையை கையில் வைத்துக் கொண்டு மாஸ்டர் படத்தில் வரும் ஒரு காட்சியில் 90ஸ் நண்பர்களுடன் உள்ளவாறு புகைப்படத்தில் இருவரும் ஒரேமாதிரி பூனையை கையில் வைத்துக் கொண்டு வெறித்தனமாக லுக்கு விட்டுக் கொண்டிருக்கும் இந்த இரண்டு புகைப்படங்களும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வர, மாஸ்டர் படக்குழு ஏதோ சொல்ல வருகிறது என சந்தேகிக்கும் ரசிகர்கள் என்னவாக இருக்கும் என யோசித்து வருகின்றனர்.