அந்த குழந்தையே நான் தான்.. அரசியல் பாம்பை அசால்ட்டாக பிடிக்கப்போறேன்.. விஜய்யின் தெறி பேச்சு!
சென்னை: ஒரு குழந்தை அம்மாவை பார்த்து சிரித்தால் அந்த உணர்வை பற்றி சொல்ல அம்மாவுக்குத் தெரியும். ஆனால், அந்த குழந்தைக்கு அதை பற்றி சொல்ல சொன்னால் அதனால் சொல்ல முடியாது. அந்த குழந்தை எப்படிங்க சொல்லும். அதே நிலைமையில் தான் உங்கள் முன் நான் நிற்கிறேன்.
ஆனால், அதே குழந்தைக்கு முன்னால் ஒரு பாம்பு வந்து படையெடுத்தால், அந்த குழந்தை பயந்துக் கொண்டு ஓடுமா? ஓடாது. அந்த பாம்பையும் சிரித்துக் கொண்டே பிடித்து விளையாடும். அந்த பாம்பு தான் அரசியல். அதை பிடிக்கத்தான் வந்திருக்கேன். ஆனால், எனக்கு பயமில்லை என நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் பேசியது ரசிகர்களையும் தொண்டர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பாசிசம் பாசிசம் என சொல்லிக் கொண்டு ஒரு பக்கம் மதவாத அரசியலை எதிர்த்து பேசும் இவர்கள் திராவிட மாடல் என சொல்லிக் கொண்டு பாயாசமா போடுறீங்க என திமுகவையும் டைரக்ட்டாக அட்டாக் செய்து பேசியுள்ளார் விஜய்.
அந்த குழந்தையே நான் தான்: அரசியலில் நானும் என் தொண்டர்களும் குழந்தைகள் தான். ஆனால், அரசியல் பாம்பை கண்டு அஞ்சாத குழந்தைகள் நாங்க என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆரம்பத்திலேயே சரவெடியாக ஆரம்பித்து பேசி அதன் பின்னர் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, தோழிகளே என சொல்லி தனது நீண்ட நெடிய பேச்சை வேறலெவல் மாஸ் ஆடியோ லாஞ்ச் பேச்சாக பேசி அசத்தினார்.
நீங்க என்ன பாயாசமா?: திமுகவுக்கு எதிராக விஜய் இந்த மாநாட்டில் பேசவே மாட்டார் என பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், பாசிச பாஜகவுக்கு ஒரு பஞ்ச் வைத்து விட்டு நீங்க என்ன பாயசாமா என திமுகவுக்கு எதிராகவும் விஜய் தனது கருத்துக்களை முன் வைத்தார். யார் பெயரையும் சொல்லாதது ஏன் என்பதற்கு பயம் எல்லாம் கிடையாது என்றும் யாரையும் இழிவுப்படுத்தவோ, அசிங்கப்படுத்தி அரசியல் செய்யவோ நான் வரவில்லை. சொல்லை விட செயல் முக்கியம். அரசியல் எதிரிகள் மற்றும் சித்தாந்த எதிரிகளை எதிர்த்து அரசியல் செய்வேன் என்றார்.
கூத்தாடி: நடிக்க வரும் போது இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவான்னு விமர்சனம் பண்ணாங்க. இப்பவும் கூத்தாடி அரசியலுக்கு வரான்னு சொல்றாங்க. எம்ஜிஆர், என்டிஆர் போன்ற கூத்தாடிகள் தான் தமிழ்நாட்டையும் ஆந்திராவையும் ஆட்சி செய்தார்கள். கூத்து தமிழர்களின் கலை என அத்தனை பந்துக்கும் சிக்ஸர் அடித்து கடகடவென பேசி மக்களுக்கான அரசியலாக இருக்கும் என்றும் 2026ல் வெற்றி பெறுவது உறுதி என்றும் நடிகர் விஜய் பேசி முடித்தார்.


Click it and Unblock the Notifications











