'அவர் படத்தை அவரிடமே நல்லாயில்லைனு சொல்லலாம்...' - விஜய்யை பாராட்டித்தள்ளிய தொகுப்பாளினி
சென்னை : நடிகையும், டி.வி.தொகுப்பாளினியுமான வி.ஜே ரம்யா, விஜய்யின் தீவிர ரசிகை. விஜய்யின் எளிமையையும், மரியாதையையும் வெகுவாகப் பாராட்டித் தள்ளியுள்ளார் ரம்யா.
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் இளையதளபதி நடிகர் விஜய். இவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கையைப் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதேபோல பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

பலரும் இவரின் எளிமையைப்பற்றி தொடர்ந்து கூறி வருகின்றனர். அந்தவகையில் பிரபல தொகுப்பாளினியான ரம்யா விஜய்யுடன் பழகிய அனுபவத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.
'விஜய் அண்ணா மிகவும் எளிமையாக இருப்பார். அவரது வீட்டிற்குச் சென்றால் வரவேற்பதில் தொடங்கி காரில் ஏறுவது வரை நம்மை பெரிய ஆள் போல ஃபீல் பண்ண வைப்பார். போலியாக இல்லாமல் நேர்மையாக நடந்து கொள்வார். நம்முடைய கருத்தை ஏற்றுக்கொள்வார்.
அவரது ஒரு படம் அவ்வளவு ரசிக்கும்படியாக இல்லை என்று நேரடியாகச் சொன்னால் கூட அந்த விமர்சனத்தை சாதாரணமாக ஏற்றுக்கொள்வார். அந்த இடத்துக்குச் நான் சென்றால் கூட இப்படி இருப்பேனா என்று தெரியவில்லை. விஜய் அண்ணா அநியாயத்திற்கு நல்லவர்' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











