GOAT movie: நெருங்கிய நண்பர்களாக மாறிய விஜய் & பிரஷாந்த்.. பிரஷாந்திற்காக விஜய் செய்யப்போகும் விஷயம்
சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அவருடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இதேபோல திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் கேமியோ கேரக்டரில் இணைந்து நடித்துள்ளனர்.
கோட் படம் வரும் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையடுத்து தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் இரு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் மூன்றாவது பாடல் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

GOAT படம்: நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகியுள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தில் விஜய்யுடன் முன்னணி நடிகர்களான பிரஷாந்த், பிரபுதேவா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் இவர்கள் விஜய்க்கு நண்பர்களாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனித்தனியாக பிரஷாந்த், பிரபுதேவா ஆகியோர் படங்களில் ஹீரோக்களாக நடித்துவரும் சூழலில் எந்தவித ஈகோவும் இல்லாமல் விஜய்யுடன் கோட் படத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களான விசில் போடு பாடலில் ஆட்டம் போட்டதை பார்க்க முடிந்தது.
விஜய் -பிரஷாந்த் நட்பு: இந்நிலையில் கோட் படத்தின் ஷூட்டிங்கின்போது விஜய் மற்றும் பிரஷாந்திடையில் மிக நெருக்கமான நட்பு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கோட் படத்திற்கு பிறகு விஜய் மீது மிகுந்த மதிப்பு கொண்டவராக பிரஷாந்த் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பிரசாந்த் நடிப்பில் ஹீரோவாக நடித்துள்ள அந்தகன் படத்தின் பாடல் ஒன்றை நடிகர் விஜய் வரும் 24ம் தேதி வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையிலான நெருங்கிய நட்பிற்கு சான்றாகவே இந்த விஷயம் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரஷாந்தின் அந்தகன் படம்: பிரஷாந்த்தின் அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு பிரசாந்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக்காக அந்தகன் படம் உருவாகியுள்ளது. படத்தில் பிரஷாந்த்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரஷாந்த் பாடலை வெளியிடும் விஜய்: படத்தில் கண் தெரியாதவராக பிரஷாந்த் நடித்துள்ளார். படத்தின் ரிலீசையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதனிடையே அந்தகன் படத்தின் பாடலை நடிகர் விஜய் வெளியிட உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் அந்தகன் படத்திற்கு மிகப் பெரிய அளவில் ப்ரோமோஷன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அந்தகன் படத்தை தொடர்ந்து இரு வாரங்களிலேயே விஜய்யுடன் அவர் இணைந்து நடித்துள்ள கோட் படமும் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











