படப்பிடிப்பில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட காக்கிச்சட்டை பட நடிகர்.. அதிரடி கைது.. பரபரப்பு!
சென்னை: படப்பிடிப்பில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல வில்லன் நடிகை கைது செய்யப்பட்ர்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் ராஸ். இவர் தாம்மால், ரன், வெல்கம், டெல்லி பெல்லி, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.
மேலும் எ சூட்டபிள் பாய் என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கிசட்டை படத்தின் மூலம் அறிமுகமானார்.

கவர்ந்த வில்லன்
இந்த படத்தில் உடல் உறுப்புகளை திருடி விற்கும் மிரட்டல் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அதிகம் பேசாமல் அதிரடி காட்டாமல் இருந்த அவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

ஷெர்னி படம்
இந்நிலையில் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகர் விஜய் ராஸ். இவர் நடித்து வரும் ஷெர்னி என்ற படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பாலாகாட் மாவட்டத்தில் நடந்து வருகிறது.

ஷுட்டிங் ஸ்பாட்
இதற்காக படக்குழுவினர் மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். அங்கிருந்து ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு தினமும் சென்று வருகின்றனர்.

நடிகையடம் தவறாக நடந்தார்
இந்நிலையில் நடிகர் விஜய் ராஸ் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த நடிகை போலீசில் புகார் அளித்து உள்ளார்.

நடிகர் கைது
நடிகையின் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோண்டியா பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த நடிகை விஜய் ராசை கைது செய்தனர். பின்னர் உடனடியாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பரபரப்பு
இந்த தகவலை கோண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதுல் குல்கர்னி தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர் ஒருவர் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டது பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











