‘’பீஸ்ட்’’ படத்திற்கு பிறகு.. வாரிசு படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை : வம்சியின் இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடிக்க விஜய் வாங்கி உள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, ஜெயசுதா,ஷாம், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார்

கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய திரைப்படம் பீஸ்ட். அனிருத் இசையமைத்த இத்திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, நடிகர்கள் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். தீவிரவாதிகள் மாலினை ஹைஜாக் செய்து துப்பாக்கி முனையில் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக் கொள்கின்றனர். அந்த மாலில் உள்ள பொது மக்களை காப்பாற்றுவதற்காக போராடுகிறார் விஜய்.

20 வருட பழைய கதை

20 வருட பழைய கதை

இப்படத்தின் டிரைலர் வெளியான போதே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளனது. டிரைலரை பார்த்த ரசிகர்கள் பலர் இது என்ன கூர்கா படம் போல இருக்கே என்றும், தீவிரவாதிகள் விமானத்தை கடத்துவது, மாலை ஹைஜாக் செய்வது, தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்பது போன்ற கதையை, 20 வருஷத்திற்கு முன்னாடியே எங்க கேப்டன் விஜய்காந்த் நடித்து முடித்து விட்டார் என்று கிண்டலடிக்கத் தொடங்கினர். ஆனால், நெல்சன் இதன் கதையே வேறு என்று கூறி ரசிகர்களை சமாதானப்படுத்தினார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

இதையடுத்து, ஏப்ரல் மாதம் 13ந் தேதி வெளியான பீஸ்ட் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அழாத குறையாக நெல்சனை கண்டபடி விமர்சனம் செய்தனர். பீஸ்ட் திரைப்படத்தின், கதைக்களம் சரியாக அமையாததால் பலரையும் ஏமாற்றத்தில் உள்ளாக்கியது. 100 கோடிக்கு மேல் வசூலை பெற்றிருந்தும் இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் நெட்டிசன்கள் தற்போது வரை கலாய்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் ஷாக்

ரசிகர்கள் ஷாக்

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் வாங்கி உள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. வாரிசு படத்தில் நடிக்க விஜய் ரூ.118 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் ரூ 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் பீஸ்ட் திரைப்படத்தின் தோல்வியால் நிச்சயம் சம்பளத்தை குறைத்துக்கொண்டு இருப்பார் என்று பார்த்தால், சம்பளத்தை கணிசமாக உயர்த்தி இருக்கிறார் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X