Thalapathy 68 Vijay Salary: விஜய் சம்பளம்.. 200 கோடி உருட்டா? உண்மையா? பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்துக்கு நடிகர் விஜய்க்கு சம்பளமாக 200 கோடி ரூபாய் பேசப்பட்டு இருப்பது உண்மை தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
லியோ படத்திற்கு நடிகர் விஜய்க்கு 130 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த படத்தின் சம்பளம் 200 கோடியை தொட்டு இருப்பதை அறிந்து சினிமா உலகமே ஷாக் ஆகி உள்ளது.
இந்தியாவிலேயே இதுவரை எந்தவொரு நடிகருக்கும் இவ்வளவு கோடி சம்பளம் வழங்கப்படாத நிலையில், முதன் முறையாக இத்தனை பெரிய சம்பளத்தை விஜய் வாங்கப் போவது உறுதி எனக் கூறுகின்றனர்.

பிகில் 300 கோடி வசூல்: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் அதிகபட்சமாக 300 கோடி ரூபாயை வசூல் செய்தது.
அதன் பின்னர் மீண்டும் விஜய்யை வைத்து படத்தை தயாரிக்க கல்பாத்தி அகோரம் பல முறை முயற்சி செய்து வந்த நிலையில், தற்போது வெங்கட் பிரபு இயக்கும் படத்தை அந்த நிறுவனம் தயாரிக்கிறது.
200 கோடி உருட்டா? உண்மையா?: தளபதி 68 படத்தில் அதிகபட்சமாக நடிகர் விஜய்க்கு 200 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தீயாக ஒரு தகவல் பரவி இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது.
சினிமா விமர்சகர்கள் பலர் இது வெறும் உருட்டு மட்டும் தான் விஜய்க்கு 125 கோடி ரூபாய் தான் சம்பளம் என வலைப்பேச்சு அந்தணன் உள்ளிட்ட பலரும் தெரிவித்து இருந்தனர்.
200 கோடி சம்பளம் தானாம்: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அதே அந்தணன் ஆரம்பத்தில் நான் கூட இது பொய் என்றே நினைத்தேன். ஆனால், சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் நடிகர் விஜய்க்கு இந்த படத்தில் 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கபட உள்ளது உண்மை தான் என்று கூறியுள்ளார்.
லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் மட்டுமே 400 கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆகி உள்ளதை அறிந்த கல்பாத்தி அகோரம் ஆரம்பத்திலேயே 175 கோடி ரூபாய் சம்பளத்துடன் விஜய்யை அணுகியதாகவும் இறுதியில் 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு ஃபைனல் செய்யப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

அரசியலுக்கு வர பணம் வேண்டும்: நடிகர் விஜய் 2026ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நேரடியாக அரசியலில் குதிக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், அரசியலுக்கு வர அவருக்கு அதிக பணத்தேவை இருப்பதாலேயே, அடுத்தடுத்த பெரிய படங்களை கமிட் செய்யும் விஜய் அதிகமான சம்பளத்தையும் கேட்டு வருகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
தயாரிப்பாளர்களுக்கு டார்ச்சர்: நடிகர் விஜய் 200 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ள நிலையில், மற்ற நடிகர்களும் தங்கள் சம்பளத்தை அதிகரிக்க நினைப்பார்கள். அப்படி அதிகரித்தால் தயாரிப்பாளர்களுக்குத் தான் அது பெரிய டார்ச்சராக மாறும் என்றும் சினிமா ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
விக்ரம் படத்தின் வசூல் 400 கோடியை தாண்டிய நிலையில், லியோ படத்தின் வசூல் 500 கோடி தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 68 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் அதை விட பெரிதாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











