சம்மர் சரவெடி.. எங்க ஆட்டம் சும்மா வெறித்தனமா இருக்கும்.. டார்க் லுக்கில் மிரட்டும் ‘பீஸ்ட்’ விஜய்!

சென்னை: பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டரை தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு நியூ இயர் ட்ரீட் கொடுத்துள்ளார்.

வலிமை படத்தின் அறிவிப்புகளில் புதிய போஸ்டர்கள் வெளியாகவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு மாஸ் போஸ்டரை வெளியிட்டு உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

தளபதியோட பீஸ்ட்

தளபதியோட பீஸ்ட்

2021ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படமாக மாறியுள்ள நிலையில், 2022ம் ஆண்டு அடுத்த அதிரடியை கொடுக்க ரெடியாகி விட்டார் விஜய். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் ட்வீட்

விஜய் ட்வீட்

பொதுவாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை மட்டுமே வெளியிட்டு வரும் விஜய் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தனது ரசிகர்களுக்காக தற்போது பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 100வது நாள் ஷூட்டிங் புகைப்படத்தை இயக்குநர் நெல்சன் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்மர் சரவெடி

சம்மர் சரவெடி

2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியாகப் போகிறது என்பதை தளபதி விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் வெளியிடும் பட போஸ்டர்கள் ட்வீட் ஏகப்பட்ட லைக்ஸ், ரீட்வீட் சாதனைகளை படைத்து வரும் நிலையில், இந்த பீஸ்ட் போஸ்டரையும் ரெக்கார்ட் பிரேக் செய்ய தளபதி ரசிகர்கள் தீயாய் வேலை செய்து வருகின்றனர்.

டார்க் லுக்கில் விஜய்

டார்க் லுக்கில் விஜய்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ்டருக்கு அடுத்த நிலையில் பல தியேட்டர்கள் அளித்த ரிப்போர்ட்டில் நம்பர் 2 இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் டார்க் காமெடி திரைப்படமான பீஸ்ட் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் விஜய் டார்க் லுக்கில் பீஸ்ட் மோடில் வெறித்தனம் காட்டுகிறார்.

பெரிய போட்டி

பெரிய போட்டி

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன், கேஜிஎஃப் சாப்டர் 2 என இரண்டு பெரிய படங்களுடன் தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதம் 14ம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X