தன்னைப் பற்றி பரவிய வதந்திக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்த விஜய்
சென்னை: சர்கார் திரைப்படம் தொடர்பான வதந்திக்கு நடிகர் விஜய் தரப்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.

தமிழில் சர்கார் பாடல்கள் மற்றும் டீசர் ரிலீசாகி சக்க போடு போட்டுள்ள நிலையில், இப்படத்தின் தெலுங்கு பாடல்கள் வரும் 29 ஆம் தேதி ரிலீஸாக உள்ளன.
சர்கார் படத்தின் தெலுங்கு பாடல்கள் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் இம்மாதம் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வார் என தகவல் பரவியது.
இதனை விஜய்யின் மக்கள் தொடர்பு அதிகாரியான ரியாஸ் அகமது மறுத்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெறும் சர்கார் படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொள்வார் என்பதில் உண்மை இல்லை என்றும், அதை புறக்கணிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழில் சர்கார் பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தார். தெலுங்கில் சந்திரபோஸ் மற்றும் ராக்கி வனமலி எழுதியுள்ளனர். ஏஆர்.ரஹ்மான் தெலுங்குக்காக பாடல்களை மீண்டும் கம்போஸ் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











