Actor Vijay: கேரளா சூட்டிங்கை முடிச்சாச்சு.. செல்ஃபியும் எடுத்தாச்சு.. சென்னை திரும்பிய விஜய்!
சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படத்தின் சூட்டிங் சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு கடந்த சில தினங்களாக கேரளாவின் திருவனந்தபுரத்திலும் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மாஸ்கோவிற்கு பயணமாகவுள்ளனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தை சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கி வருகிறார் வெங்கட் பிரபு. டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடங்களில் நடித்து வருகிறார்.
இதில் இளைய வயது விஜய்யை இளமையாக காட்டுவதற்காக டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சூட்டிங்தான் தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து 6 நாட்கள் எடுக்கப்பட்ட இந்த சூட்,டிங் இன்றைய தினம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இன்றைய தினம் நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். அவருக்கு இந்த 6 நாட்களும் தொடர்ந்து ஏராளமான உற்சாகத்தையும் வரவேற்பையும் கேரள ரசிகர்கள் கொடுத்துள்ளனர். கேரள ரசிகர்கள் மற்றும் தமிழ்நாட்டு ரசிகர்கள் தன்னுடைய இரு கண்கள் போன்றவர்கள் என விஜய்யே உற்சாகத்துடன் பேசியதை பார்க்க முடிந்தது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக கேரளாவில் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை, பாங்காக் போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவிலும் இன்றைய தினம் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக கேரளாவில் இருந்த விஜய்யை கேரள ரசிகர்கள் தினந்தோறும் அவர் தங்கியிருந்த ஹோட்டல் மற்றும் சூட்டிங் ஸ்பாட்டில் காத்திருந்து கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்களின் அன்பை ஏற்று பதிலுக்கு தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினார் விஜய்.
நட்சத்திர பட்டாளம்: விஜய்யுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இதனிடையே வெங்கட்பிரபுவின் அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்ட கேங்கும் படத்தில் நடித்து வருகிறது. இத்தனை நட்சத்திரங்களையும் GOAT படத்தில் இணைத்து அவர்களை வேலை வாங்கி வருகிறார் வெங்கட்பிரபு. சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துவருகிறார். இதன் புகைப்படங்கள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
டைம் டிராவல் கதைக்களம்: டைம் டிராவலை மையமாக கொண்டு படத்தின் கதைக்களம் உருவாகிவருவதாகவும் இதில் ஒரு விஜய் வில்லனாக நடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மாஸ்கோ செல்லவுள்ளனர். அங்கு படத்தின் சூட்டிங் தொடர்ந்து இரு வாரங்கள் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை திரும்பிய விஜய்: கடந்த 6 நாட்களாக கேரளாவின் திருவனந்தபுரத்தில் கிரீன் ஃபீல்ட் போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் கேரளா சூட்டிங்கை முடித்துக் கொண்டு இன்றைய தினம் விஜய் சென்னை திரும்பியுள்ளார். கடந்த 6 நாட்களும் விஜய்யை அவரது சூட்டிங் ஸ்பாட், தங்கியிருந்த ஹோட்டல் போன்ற இடங்களில் காத்திருந்து பார்த்து தங்களது உற்சாகத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இன்றைய தினமும் அவருக்கு சிறப்பான பிரியத்துடன் அனுப்பி வைத்தனர். விஜய்யும் தொடர்ந்து ரசிகர்களிடம் தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்திவிட்டு விமானத்தில் ஏறி சென்னை வந்திறங்கினார்.


Click it and Unblock the Notifications











