வாரிசு சூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய விஜய்.. விமானநிலைய வீடியோ இதோ!

சென்னை : நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Recommended Video

Vishal-க்கு மீண்டும் கால் முறிவு *Cinema

வாரிசு படத்தைக் காட்டிலும் அதன் வெளியீட்டை காட்டிலும் ரசிகர்கள் அதிகமாக தளபதி 67 படத்தில்தான் அதிக ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.

இந்தப் படத்தில் நடிக்கவுள்ள அடுத்தடுத்த நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் வாரிசு படம் குடும்ப சென்டிமெண்டை முழுக்க முழுக்க மையமாக கொண்டு உருவாகி வருகிறது. படத்தில் விஜய் படத்திற்கேயுரிய காமெடி, ஆக்ஷன் இருந்தாலும் பேமிலி சென்டிமெண்ட் தூக்கலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

4வது கட்ட சூட்டிங்

4வது கட்ட சூட்டிங்

இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் அடுத்தடுத்து நடைபெற்றது. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாகியுள்ளார். இந்நிலையில் படக்குழுவினர் தற்போது பெரிய பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். படத்தின் சூட்டிங் நடைபெறும் இடங்களில் எல்லாம் படத்தின் காட்சிகள் அவ்வப்போது லீக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

லீக்காகும் படக்காட்சிகள்

லீக்காகும் படக்காட்சிகள்

நடிகர் விஜய்யின் படங்கள் என்றாலே அதன் சுவாரஸ்யம்தான் மிகப்பெரிய பலமாக இருக்கும். அந்த வகையில் வாரிசு படத்தின் காட்சிகள் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் வெளியாகிவருவது அதன் சுவையை குறைக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். எவ்வளவுதான் பாதுகாப்பை அதிகரித்தாலும் படக்காட்சிகள் லீக்காவதை தவிர்க்க முடியாமல் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் சூட்டிங்

விசாகப்பட்டினத்தில் சூட்டிங்

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் வாரிசு படத்தின் சூட்டிங் 4வது கட்டமாக நடைபெற்றது. இதில் விஜய், சரத்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். ஹார்பரில் சண்டைக் காட்சிகள் மற்றும் மற்ற இடங்களில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த இரு காட்சிகளும் இணையத்தில் வீடியோவாகவே லீக்காகின.

சென்னை திரும்பிய விஜய்

சென்னை திரும்பிய விஜய்

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் சூட்டிங்கை முடித்துக் கொண்டு தற்போது விஜய் சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் அவர் இருக்கும்படியான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

தளபதி 67ல் விஜய்

தளபதி 67ல் விஜய்

இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அக்டோபர் மாதத்தில் தளபதி 67 படத்தின் சூட்டிங்கில் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளார் விஜய். இன்னும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகாமல் ரசிகர்களின் பொறுமையை சோதித்து வருகிறது. ஆனால் அதிகமான பேட்டிகளில் லோகேஷ் படம்குறித்து ஏற்கனவே மறைமுகமாக பல தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X