நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்! #Thalapathy64
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது தனது 63வது படமான பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது.

பிகில் படம் வரும் தீபவாளிக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் 64வது படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியீட்டுள்ளது.
விஜயின் 64வது படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். எக்ஸ்பி கிரியேஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் 64வது படமான இந்தப் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயின் 64வது படம் குறித்த அறிவிப்பை தொடர்ந்து #thalapathy64 என்ற ஹேஷ்டேக்கை அவரது ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











