Beast Box Office Prediction: முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலை தட்டித் தூக்க காத்திருக்கும் பீஸ்ட்!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ள நிலையில், மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியான முதல் நாளில் 36 கோடி ரூபாய் வசூலை தமிழ்நாட்டில் பெற்ற நிலையில், விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அதை விட அதிக வசூலை ஈட்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையிலேயே பீஸ்ட் புக்கிங் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத கலெக்‌ஷனை அள்ளும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய்யின் பீஸ்ட்

விஜய்யின் பீஸ்ட்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. Best Ever Action Stunts by Thalapathy Vijay என்பதன் சுருக்கமே பீஸ்ட் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கம்ப்ளீட் பேக்கேஜ்

கம்ப்ளீட் பேக்கேஜ்

நடிகர் விஜய் எப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்து படம் பண்ணுகிறார் என்கிற கேள்வியை இயக்குநர் நெல்சன் கேட்கும் போது, கதை தனக்கு பிடித்தால் ஓகே சொல்லிவிடுவேன் என்று சொன்ன விஜய் அனைத்து ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக இருப்பது போல பார்த்துக் கொள்வேன் என விஜய் சொன்னதில் இருந்தே பீஸ்ட் படமும் அப்படித்தான் இருக்கும் என்பது தெளிவாகி உள்ளது.

வலிமை வசூல் முறியடிப்பு

வலிமை வசூல் முறியடிப்பு

பீஸ்ட் படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸே வலிமை படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 190 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மட்டுமே 230 கோடி ரூபாய்க்கு மேல் என்கின்றனர். வலிமை படத்தின் வசூல் 200 கோடி என கடைசியாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் வசூல் கணிப்பு

முதல் நாள் வசூல் கணிப்பு

இந்நிலையில், வலிமை படத்தின் முதல் வசூலையும் பீஸ்ட் படம் எளிதாக கடந்து விடும் என்பதே அனைவரது கணிப்பாக உள்ளது. அதற்கு ஏற்றார்போல டிக்கெட் புக்கிங் ஒரு வாரத்திற்கு பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் ஆகி உள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய வசூல் வேட்டையை தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் பீஸ்ட் படம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

40 கோடி

40 கோடி

நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 36 கோடி ரூபாய் வசூலை அடைந்ததாக கூறப்படும் நிலையில், விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் முதல் நாளில் 38 கோடி முதல் 40 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர். கேஜிஎஃப் திரைப்படம் ஒரு நாள் கழித்துத் தான் வெளியாக உள்ள நிலையில், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் பீஸ்ட் படத்துக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.

உலகளவில்

உலகளவில்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை காண டோலிவுட் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர். கேரளா விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை வேற லெவலில் கொண்டாட காத்திருக்கின்றனர். வட இந்தியாவில் பெரிய அளவு வசூல் வருவது சிரமம் தான் என்றாலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பீஸ்ட் புக்கிங் அமோகமாக உள்ளது. தமிழ்நாட்டில் 40 கோடி வசூலை பீஸ்ட் படம் பெற்றால், உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக முதல் நாளிலேயே 70 கோடி வசூலை பீஸ்ட் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

என்னமா கார் ஓட்டறாரு..நம்ம Thalapathy Vijay | Beast | Rolls Royce | Tamil Filmibeat
விமர்சனம் முக்கியம்

விமர்சனம் முக்கியம்

அஜித்தின் வலிமை திரைப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளியான பிறகு பலரும் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்தது தான் அந்த படம் மிகப்பெரிய வசூலை குவிக்க முடியாமல் போக காரணமாக அமைந்தது. இந்நிலையில், பீஸ்ட் படத்தின் விமர்சனத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கேஜிஎஃப் 2 படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பீஸ்ட்டுக்கு ஏகப்பட்ட சவால்கள் உள்ளன. வீரராகவனாக விஜய் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பார்க்க வெயிட்டிங்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X