யூடியூபில் மாஸ் காட்டும் அரபிக்குத்து பாடல்.. லிரிக் வீடியோ 446 மில்லியன்.. வீடியோ 150 மில்லியன்!
சென்னை : நடிகர் விஜய்யின் 65வது படமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடைக் கொண்டாட்டமாக வெளியானது பீஸ்ட் படம்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
ஆனாலும் அனிருத் இசையில் படத்தின் பாடல்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

நடிகர் விஜய்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது பீஸ்ட் படம். விஜய்யின் 65வது படமாக வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் நெல்சன் திலீப்குமார்.

கலவையான விமர்சனங்கள்
அவரது முந்தைய படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் அவர்களது எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்ய தவறியது. படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

சிறப்பான பாடல்கள்
ஆனால் அனிருத் இசையில் படத்தின் அரபிக்குத்து, ஜாலிலோ ஜிம்கானா உள்ளிட்ட பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றன. குறிப்பாக முதலில் வெளியான அரபிக்குத்து பாடல் ரசிகர்களை கட்டிப் போட்டது. படத்தின் ரிலீசுக்கு முன்னதாக இந்தப் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. தொடர்ந்து கடந்த மே மாதத்தில் படத்தில் வீடியோ பாடல் வெளியானது.

யூடியூபில் 150 மில்லியன் வியூஸ்
இந்நிலையில் முன்னதாக வெளியான லிரிக் வீடியோ பாடல் தற்போது யூடியூபில் 446 மில்லியன் வியூஸ்களை தாண்டியுள்ளது. மே மாதத்தில் வெளியான வீடியோ பாடல் தற்போது 150 மில்லியன் வியூஸ்களை தாண்டியுள்ளது. விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகிவரும் வாரிசு படத்தின் சூட்டிங்கே நிறைவடைந்த நிலையிலும், பீஸ்ட் படத்தின் பாடலை ரசிகர்களை கொண்டாடி வருகின்றனர்.

சிறப்பான வசூல்
விஜய் படங்கள் சமீப காலங்களில் ரசிகர்களிடையே மிகுந்த மாஸ் காட்டி வருகிறது. பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும், அந்தப் படத்தின் வசூல் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களை தொடர்ந்து சிறப்பாக திட்டமிட்டு வருகிறார் விஜய்.
Recommended Video

அடுத்தடுத்த படங்கள்
வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இணையவுள்ள தளபதி 67 படத்தின் சூட்டிங் வரும் அக்டோபர் மாதத்திலேயே துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு விஜய் பிறந்தநாளிலேயே வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், விரைவில் வெளியாகும் என்று காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











