விஜய்யே குட்டியா இருக்காரு.. அவரு மடியில ஒரு குட்டிப் பையன்.. வைரலாகும் 2 ஹீரோக்களின் போட்டோஸ்!
சென்னை: நடிகர் விஜய் குட்டிப் பையனாக இருந்தபோது தன்னைவிட குட்டிப் பையனை மடியில் உட்கார வைத்து சாப்பாடு ஊட்டும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார் நடிகர் விஜய்.
விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். விஜய் குறித்து ஏதாவது ஒரு தகவல் லேசாக கசிந்தாலும் அதனை வைரலாக்கி ட்ரென்ட்டாக்கி விடுகிறார்கள்.

குழந்தை பருவ போட்டோ
இதனால் நாள்தோறும் விஜய் குறித்து ஏதாவது ஒன்று ட்ரென்ட்டிங்கிலேயே இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது விஜயின் குழந்தைப் பருவ போட்டோக்கள் சில சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

மடியில் உட்கார வைத்து
அதாவது நடிகர் விஜய் தனது சிறுவயதில் தன்னுடைய தம்பி விக்ராந்த் மற்றும் தனது தாயார் ஷோபா உடன் ஒரு திருமண விழாவில் பங்குகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் விஜய் தனது தம்பியை மடியில் அமரவைத்து உணவு உண்ணும் க்யூட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இரண்டு ஹீரோக்கள்
நடிகர் விக்ராந்தும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பியான இரண்டு ஹீரோக்களின் இந்த குழந்தை பருவ போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜயின் மாஸ்டர்
நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார். அவர்கள் மட்டுமின்றி ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

பொங்கல் ரிலீஸ்
கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. மாஸ்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அடிக்கடி தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











