விஜய் ஓட்டி வந்த சைக்கிள்…என்ன மாடல்..அக்குவேறு ஆணிவேராக ஆராயும் ரசிகர்கள்!
சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்பு ஒருபுறம் இருக்க அதைவிட பரபரப்பாக பேசப்பட்டது விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது தான்.
Recommended Video
இந்தியா முழுவதும் நேற்று டிரெண்டிங்காக பேசப்பட்டது விஜய்யின் சைக்கிள் பயணம் தான்.
இதனால் குஷியான விஜய் ரசிகர்கள் அவர் ஓட்டி சென்ற சைக்கிள் குறித்து இணையத்தில் அலசி ஆராய ஆரம்பித்துவிட்டனர்.

விஜய் சைக்கிள்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே முதல் ஆளாக வாக்களித்தார் அஜித். மேலும் அவர் அணிந்து இருந்த மாஸ்க் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து, நடிகர் விஜய் நீலாங்கரை வீட்டில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

உள்நோக்கம் இல்லை
பெட்ரோல், டீசல் விலையை காரணம் காட்டித்தான் அவர் அவ்வாறு வந்தார் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், வாக்குச்சாவடி மையம் வீட்டுக்கு அருகில் இருப்பதாலும்,மேலும் அப்பகுதி குறுகிய சந்து என்பதால் அப்பகுதியில் கார் செல்ல முடியாது என்றும் அதனால் தான் விஜய் சைக்கிளில் சென்றார் என்றும், இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை என அவரது மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மான்ட்ரா மெட்டல் மாடல்
இந்நிலையில், விஜய் சைக்கிளில் வந்ததால் ஏகத்திற்கும் குஷியான ரசிகர்கள் அந்த சைக்கிள் குறித்து இணையத்தில் அலசி ஆராய ஆரம்பித்து விட்டனர். இந்த சைக்கிள் பெர்ஃபார்மென்ஸ் வகை சைக்கிள் மாடல்களை தயாரிக்கும் மான்ட்ரா நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் இந்த மெட்டல் மாடலும் ஒன்றாம்.

22,500 ரூபாய்
மேலும் இந்த சைக்கிள் கார்பன் பிளாக் மற்றும் நியான் ரெட் என இரண்டு நிறத்தில் மேட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 ஸ்பீடு கியரும், பிரேக் மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. 16 கிலோ எடை கொண்ட இந்த சைக்கிளின் விலை 22,500 ரூபாயாம். விஜய் ஓட்டி வந்த சைக்கிள் 2019ம் ஆண்டு மான்ட்ரா நிறுவனம் வெளியிட்ட மெட்டல் மாடல் சைக்கிளாம்.


Click it and Unblock the Notifications











