Actor Vijay: நடிப்பை விடும் விஜய்யின் முடிவு.. ரசிகர்கள் வருத்தம்!

சென்னை: நடிகர் விஜய் 30 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் தன்னை முன்னணி நடிகராக நிலை நிறுத்தியுள்ளார். இளைய தளபதி என்று ரசிகர்களை கவர்ந்துவந்த அவர் தளபதியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறார். அவரது விஜய் மக்கள் இயக்கம் நீண்ட காலங்களாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அவர் அரசியலில் முழுநேரமாக ஈடுபட உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய கட்சியின் பெயரை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்று அவரது கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி விஜய் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்களுக்கு முழுமையான சேவையை தொடர அரசியல் அதிகாரம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் மக்களின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளதாகவும் விஜய் தனது அறிக்கையில் கூறியுள்ளார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு என்றும் விஜய் தெரிவித்துள்ளார். தான் ஒப்புக் கொண்டுள்ள இன்னொரு திரைப்படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Actor Vijay’s decision on quiting Acting makes fans sad

நடிகர் விஜய்: நடிகர் விஜய் 30 ஆண்டுகளை கடந்து திரைத்துரையில் நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார். முன்னதாக சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். நாளைய தீர்ப்பு படத்தில் துவங்கிய விஜய்யின் திரைப்பயணம் இளைய தளபதியாகவும் தற்போது தளபதியாகவும் சிறப்பாக தொடர்ந்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த சில வருடங்களாக பல்வேறு சமூகப் பணிகளை விஜய் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை பதிவு செய்துள்ளதாக தற்போது விஜய் அறிவித்துள்ளார்.

நடிப்பு குறித்து விஜய் முடிவு: கடந்த மாதம் 25ம் தேதி சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் செயலக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதையும் குறிப்பிட்ட நடிகர் விஜய், தற்போதைய சூழலில் மக்களின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகள் உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே அவர் தொடர்ந்து நடிப்பில் ஈடுபடுவாரா என்ற கேள்விக்கும் அவர் இந்த அறிக்கையின்மூலமே பதிலளித்துள்ளார்.

முழுநேர அரசியல்: தற்போது தளபதி 68 படத்தில் நடித்துவரும் விஜய், மேலும் ஒரு படத்தை கமிட் செய்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளதாக அவர் கூறியுள்ளார். கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாதவகையில் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். முழுமையாக அரசியலில் ஈடுபடுவது ஒன்றே தமிழ் நாட்டு மக்களுக்கு தான் செய்யும் நன்றிக் கடனாக கருதுவதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் அவருக்கு சிறப்பான வசூலை பெற்றுத் தந்து வருகின்றன.

வெற்றிப்பட நாயகன்: அந்த வகையில் கடந்த ஆண்டில் வெளியான லியோ படம் 600 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு படத்திற்கு ஏறக்குறைய 200 கோடி ரூபாய்களை சம்பளமாக விஜய் பெற்று வருகிறார். சினிமாவில் டாப் மோஸ்ட் ஹீரோவாக இருக்கும் விஜய், சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. நீண்டகாலங்களாக எதிர்பார்த்துவந்த விஜய்யின் அரசியல் பிரவேசம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் சினிமாவில் நடிப்பதில்லை என்ற அவரது முடிவு ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் இதுகுறித்து ரசிகர்கள் அடுத்தடுத்த கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X