அரசு மருத்துவமனைக்கு மாஸ்க், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொடுத்த விஜய் ரசிகர்கள்!

சென்னை: அரசு மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாஸ்க் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளனர்.

Recommended Video

Thalapathy Fans அசத்தும் உதவி | Free Oxygen Cylinder, Mask | Thalapathy Vijay

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது.

கொரோனாவால் உயிரிழப்புகளும் அதிகரிப்பதால் பல்வேறு மாநில அரசுகள் செய்வது அறியாமல் திணறி வருகின்றனர். பல மாநிலங்களில் உடல்கள் எரியூட்டப்பட காத்துக்கிடக்கின்றன.

முயன்ற அளவுக்கு உதவி

முயன்ற அளவுக்கு உதவி

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டாலும் படுக்கைகள் கிடைக்காமலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் என பலரும் அரசு மருத்துவமனைகளுக்கு தங்களால் முயன்ற அளவுக்கு உதவிகளை செய்து வருகிறன்றனர்.

விஜய் மக்கள் இயக்கத்தினர்

விஜய் மக்கள் இயக்கத்தினர்

அந்த வகையில் நடிகர் விஜய்யின் ரசிகர்களான விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த் ஆலோசனையின் பேரில் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சீனு மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் மாவட்ட மாணவரணி தலைவர் அப்பாஸ் ஏற்பாட்டில் அரசு மருத்துவமனைகளில் முக்கிய தேவையாக உள்ள மாஸ்க்குகள், க்ளவுஸ்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கப்பட்டன.

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக் 10 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருத்துவர்களுக்கு 200 என் 95 மாஸ்க்குகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மூன்று லேயர்களை கொண்ட 1000 மாஸ்க்குகளை வழங்கினர். மேலும் 1000 க்ளவுஸ்களையும் வழங்கியுள்ளனர்.

விஜய்யின் உத்தரவு

விஜய்யின் உத்தரவு

நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் நடைபெற்ற இப்படத்தில் ஃபர்ஸ்ட் ஷெட்யூட் ஷூட்டிங் அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில் நடிகர் விஜய் நாடு திரும்பிய கையோடு ரசிகர்களுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளுக்கு உதவும் பணியில் இறங்கியுள்ளனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X