வம்பிழுக்கும் விஜய் ரசிகர்கள்.... தலைமைச் செயலகத்தில் இருப்பது போன்று கட் அவுட்!

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்துக்கு தலைமைச் செயலகத்தில் நடிகர் விஜய் இருப்பதைப் போன்று கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க பூஜா ஹெக்டே, செல்வராகவன் என முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்.

பீஸ்ட் திரைப்படத்தில் வீரராகவன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். முதல் முறையாக நடிகராகி உள்ள செல்வராகவன், தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு அதிகாரியாக நடித்துள்ளார்.

அதிகமான எதிர்பார்ப்பு

அதிகமான எதிர்பார்ப்பு

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு விஜய், நெல்சன் இயக்கும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்தார். நெல்சன் இயக்கிய டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தை பற்றிய அறிவிப்பு வந்தது. அதன் பிறகு வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இதனால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உளவாளியாக

உளவாளியாக

பீஸ்ட் படத்தில், இந்திய ராணுவத்தின் உளவாளியாக இருக்கிறார் விஜய், ஒரு அசம்பாவிதம் காரணமாக தனது வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்கு வருகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ஷாப்பில் மால் தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்படுகிறது. அதனுள் மாட்டிக்கொள்ளும் விஜய், பின்பு அங்கிருந்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே பீஸ்ட் படத்தின் கதை.

திருவிழாப்போல கொண்டாட்டம்

திருவிழாப்போல கொண்டாட்டம்

இந்நிலையில், மயிலாடுதுறையில் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. திரைப்படத்தை காண ஏராளமான விஜய் ரசிகர்கள் திரையரங்குகள் முன் குவிந்தனர். இரண்டு திரையரங்குகளிலும் ரசிகர்களுக்காக 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் திருவிழாப்போல கொண்டாடினார்கள்.

Recommended Video

BEAST | Nelson, Anirudh, Pooja hegde at Vetri Theatre Chrompet | Tamil Filmibeat
பிரம்மாண்ட கட்அவுட்

பிரம்மாண்ட கட்அவுட்

இரண்டாவது காட்சி தொடங்குவதற்கு முன்பாக, திரையரங்கம் முன்பு குவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், தலைமைச் செயலகத்தில் விஜய் அமர்ந்து இருப்பதைப் போன்ற பிரம்மாண்டமான கட் அவுட்களை வைத்து இனிப்புகளை வழங்கினர். கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யாமல், நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு பால் பாக்கெட்டுகளை இலவசமாக கொடுத்தனர். மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X