Vijay :பிரம்மாண்டமாக நடந்து முடிந்த லியோ படத்தின் பாடல் சூட்டிங்.. அடுத்தது என்ன தெரியுமா?

சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங்கை காஷ்மீரில் மிகுந்த குளிருக்கிடையில் எடுத்து முடித்த படக்குழு, தற்போது சென்னையில் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் போட்டு எடுத்து வருகின்றனர்.

நடிகர் விஜய் -லோகேஷ் காம்பினேஷனில் வெளியாகவுள்ள இரண்டாவது படம் லியோ. படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Vijays Leo movie grand song shooting finished

லியோ படத்தின் பிரம்மாண்ட பாடல் காட்சி சூட்டிங் நிறைவு : நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் முன்னதாக மாஸ்டர் படத்தில் கூட்டணி அமைத்திருந்தனர். இந்நிலையில் இவர்களது கூட்டணி இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் 50 நாட்கள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், சென்னை திரும்பிய படக்குழு, பிரபல ஸ்டூடியோவில் செட் போட்டு அடுத்தடுத்த ஷெட்யூல்களை எடுத்து வருகிறது. அர்ஜூன் உள்ளிட்டவர்களின் போர்ஷன்களும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே கடந்த மாத இறுதியில் இந்தப் படத்தின் பிரம்மாண்ட பாடல் காட்சியின் ரிகர்சல் தொடர்ந்து நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இந்தப் பாடல் காட்சியின் சூட்டிங் துவங்கப்பட்டு பிரம்மாண்டமான செட்டும் போடப்பட்டு எடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான துணை நடிகர்களும் இந்தப் பாடல் காட்சியில் இணைந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ரிகர்சலிலும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய்யின் தரை லோக்கல் நடனத்தில் இந்தப் பாடல் காட்சி தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் ஒவ்வொரு காட்சியையும் லோகேஷ் மற்றும் நடன இயக்குநர் இணைந்து செதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துவரும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இன்னும் சில தினங்களில் வரவுள்ள விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பாடல் காட்சி, தமிழ் சினிமாவில் பெஸ்ட் பாடல்களில் ஒன்றாக இருக்கும் என்று படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் பாடல் காட்சியில் சில பிரபலங்கள் கெஸ்ட் அப்பீயரன்சில் தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரபல நடிகை மடோனா சபாஸ்டியன், இசையமைப்பாளர் அனிருத், லோகேஷ் கனகராஜ் மற்றும் படத்தின் மேலும் சிலர் இந்தப் பாடலில் ஆடியுள்ளார்களாம்.

Actor Vijays Leo movie grand song shooting finished

இந்தப் பாடலை பாடியுள்ளார் நடிகர் விஜய். முன்னதாக இந்தப் பாடலை படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பாடியிருந்த நிலையில், விஜய் வாய்சில் இந்தப் பாடல் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று லோகேஷ் விருப்பப்பட்டதால், இந்தப் பாடலை தற்போது விஜய்யே பாடியுள்ளார். மேலும் பாடல்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் தராத லோகேஷ், இந்தப் படத்தில் பாடல் காட்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரம்மாண்டமான இந்தப் பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், க்ளைமேக்ஸ் காட்சியை திட்டமிட்டுள்ளாராம். இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள், பிரம்மாண்டமான செட் போடப்பட்டு எடுக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். இந்த மாதத்திற்குள் படத்தன் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X