கடுமையான குளிரிலும் படக்குழுவை அசரவைத்த விஜய்.. அதனாலதாங்க அவர் தளபதி!

ஸ்ரீநகர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது அவரது தளபதி 67 படம். படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

த்ரிஷா, கௌதம் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

விஜய் 50 வயது கேங்ஸ்டராக இந்தப் படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் டைட்டில் லியோ என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் படத்தின் டைட்டில், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு திக்குமுக்காட செய்தது.

அடுத்தடுத்த இடங்களில் சூட்டிங்

அடுத்தடுத்த இடங்களில் சூட்டிங்

படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நீண்ட வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளார். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். சென்னை, கொடைக்கானல் என அடுத்தடுத்த இடங்களில் படத்தின் சூட்டிங் நடைபெற்றது.

காஷ்மீரில் சூட்டிங்

காஷ்மீரில் சூட்டிங்

இதனிடையே தற்போது காஷ்மீரில் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்கென கடந்த சில தினங்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் படக்குழுவினர் காஷ்மீர் புறப்பட்டு சென்றனர். இதனிடையே காஷ்மீரில் கடுமையான குளிர் நிலவுவதால் இரவு நேரங்களில் படத்தின் சூட்டிங்கை எடுப்பதை படக்குழுவினர் தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படக்குழுவை அசரவைத்த விஜய்

படக்குழுவை அசரவைத்த விஜய்

இதையடுத்து காலை 9 மணியளவில் படத்தின் சூட்டிங்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான குளிரிலும் தினந்தோறும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு நடிகர் விஜய் 8.15 மணிக்கெல்லாம் ஆஜராகிவிடுகிறாராம். அவரது இந்த நேரந்தவராமையை பார்த்து படக்குழுவினர் மிகுந்த ஆச்சர்யம் அடைந்து வருகின்றனராம்.

விஜய்யின் மாறாத அக்கறை

விஜய்யின் மாறாத அக்கறை

சினிமாவில் தன்னுடைய 30 ஆண்டுகாலத்தை கடந்துள்ள போதிலும் தற்போதும் நேரந்தவராமையை முக்கியமான குவாலிட்டியாக நடிகர் விஜய் கடைபிடித்து வருவதாக பல இயக்குநர்கள் பாராட்டி வருகின்றனர். நடனம், இயல்பான நடிப்பு என பல்வேறு திறமையை கொண்டவராக இருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய முதல் படத்தில் காட்டிய அக்கறையை அவர் காட்டி வருவதாகவும் பாராட்டுக்கு உள்ளாகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X