லியோ படத்தின் சூப்பர் அப்டேட் இதோ.. தயாரிப்பாளரை குஷிப்படுத்திய லோகேஷ்!

ஸ்ரீநகர் : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தில் இணைந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது.

விஜய்யின் லியோ படம்

விஜய்யின் லியோ படம்

நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ. விஜய்யின் 67வது படமான இந்தப் படம் வாரிசு படத்தின் சூட்டிங்கின்போதே ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளானது. இதனிடையே வாரிசு படத்தின் ரிலீசை தொடர்ந்து லியோ படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியானது.

காஷ்மீரில் சூட்டிங்

காஷ்மீரில் சூட்டிங்

இந்தப் படத்தின் டைட்டில், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை தயாரிப்பு தரப்பு வெளியிட்டது. படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் மிகுந்த குளிருக்கிடையில் நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பான சூட்டிங்

பாதுகாப்பான சூட்டிங்

படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை அவ்வப்போது படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். படத்தில் விஜய் நடித்த ஒரு காட்சி இணையதளத்தில் லீக்கானதை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சூட்டிங் ஸ்பாட்டில் செல்போன் உள்ளிட்டவை எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் சூட்டிங் நிறைவு

மே மாதத்தில் சூட்டிங் நிறைவு

லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் தொடர்ந்து 60 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மார்ச் 25 முதல் 30ம் தேதிக்குள் படத்தின் படப்பிடிப்பை முடிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து சில தினங்கள் சென்னையிலும் படத்தின் சூட்டிங்கை நடத்தி மே மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை முடிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம்.

தயாரிப்பாளர் மகிழ்ச்சி

தயாரிப்பாளர் மகிழ்ச்சி

இதையடுத்து நான்கு மாதங்கள் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடத்தப்பட்டு அக்டோபர் 19ம் தேதி முன்னதாக அறிவிக்கப்பட்டது போல படத்தை சர்வதேச அளவில் திரையிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதால் தயாரிப்பு செலவுகள் குறையும் என்பதால் தயாரிப்பாளர் லலித்குமாரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

எப்போதும் தன்னுடைய படங்களை மிகவும் சிறப்பாக திட்டமிட்டு ரசிகர்களுக்கு கொடுப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் லியோ படத்தின் சூட்டிங்கையும் சிறப்பாக நடத்தி வருகிறார். திட்டமிட்டபடி இந்தப் படம் ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X