சென்னை திரும்பும் லியோ படக்குழு.. அடுத்த சூட்டிங் எப்ப எங்க நடக்குது தெரியுமா?

சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ.

விஜய்யின் 67வது படமான லியோ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளது.

படத்தின் பூஜை எளிமையாக போடப்பட்டு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. படத்தின் சூட்டிங்கிற்காக தனி விமானம் மூலம் படக்குழுவினர் காஷ்மீர் புறப்பட்டு சென்றனர்.

லியோ படத்தின் சூட்டிங்

லியோ படத்தின் சூட்டிங்

நடிகர் விஜய், த்ரிஷா நீண்ட வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீரில் துவங்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடித்துள்ளதாகவும் அவருடன் 6 வில்லன்கள் மோதவுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மிஷ்கின், கவுதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டது,

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

படத்தில் விஜய் -த்ரிஷாவுடன், பிரியா ஆனந்த், கவுதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் இணைந்த நிலையில் மிகுந்த குளிருக்கிடையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டதாக மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்டவர்களும் தெரிவித்திருந்தனர். இதனிடையே பாலிவுட் ஹீரோ சஞ்சய் தத் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சூட்டிங்கில் இணைந்தார். காஷ்மீரில் அவரது போர்ஷன்கள் முடிந்த நிலையில், அடுத்ததாக சென்னையில் நடைபெறும் சூட்டிங்கிலும் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வித்தியாசமான கேரக்டர்

வித்தியாசமான கேரக்டர்

லியோ படத்தில் விஜய்யின் கேரக்டர் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படத்திலேயே விஜய்யை வித்தியாசமாக அவரது, ஹீரோயிசத்தை உடைக்கும் சில விஷயங்களை இணைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் லியோ விஜய் படமாக இருக்காது 100 சதவிகிதம் தன்னுடைய படமாக இருக்கும் என்று முன்னதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். அதனால் சிறப்பான திரைக்கதையுடன் வித்தியாசமான விஜய்யை இந்தப் படத்தில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் சூட்டிங்

காஷ்மீர் சூட்டிங்

இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து ஏறக்குறைய இரண்டு மாதங்கள் காஷ்மீரில் நடந்துள்ளது. இந்த சூட்டிங்கின் இடையில் விஜய் சென்னைக்கும் வந்து சென்றதை பார்க்க முடிந்தது. அப்போது படத்தில் அவரது கெட்டப்பும் வெளியானது. மேலும் சஞ்சய் தத்தை வரவேற்கும் தருணத்தின் வீடியோவும் வெளியான நிலையில், அதிலும் விஜய்யின் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

காஷ்மீர் சூட்டிங் நிறைவு

காஷ்மீர் சூட்டிங் நிறைவு

இதனிடையே காஷ்மீரில் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. தொடர்ந்து சில நாட்கள் இடைவெளி எடுத்துக் கொண்டு, சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பான திட்டமிடலுடன் லோகேஷ் காஷ்மீர் ஷெட்யூலை சிறப்பாக முடித்துள்ளார். சென்னையில் நடைபெறும் சூட்டிங்கில் விஜய் -சஞ்சய் தத் காம்பினேஷன் காட்சிகளின் சூட்டிங் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்ப்பில் லியோ படம்

எதிர்பார்ப்பில் லியோ படம்

விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணி மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டியது. தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் அந்தப் படத்தை இன்டஸ்ட்ரியல் ஹிட்டாக்கினார். இதையடுத்து தற்போது விஜய் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் அவரது 100 சதவிகிதப்படம் என்ற அப்டேட் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதேபோல நீண்ட ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தில் விஜய் -த்ரிஷா இணைந்துள்ளதும் படத்தை மேலும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X