ஐ லவ் சாக்லேட்.. அதே பேக்கிரவுண்ட்.. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய்.. மிரட்டும் லியோ வீடியோ!
சென்னை : நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் தற்போது 40 நாட்களை தாண்டி காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சரியான திட்டமிடலுடன் ஒரு நடிகருக்கு பின்னால் மற்றவர் என்ற விதத்தில் மிஷ்கின், கவுதம் மேனன் என்று பேக்கப் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
அடுத்ததாக இன்றைய தினம் லியோ சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார் சஞ்சய் தத். அவரை தொடர்ந்து அர்ஜுன் லியோ சூட்டிங்கில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் லியோ படம்
நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது லியோ படம். இந்தப் படத்திற்கான அப்டேட்டிற்காக வாரிசு படத்தின் சூட்டிங்கிலிருந்தே ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருந்தனர் விஜய் ரசிகர்கள். அவர்களின் பொறுமையை சோதித்த தயாரிப்பு தரப்பு, வாரிசு படம் ரிலீசாகி, சில தினங்கள் கழித்தே படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மேலும் படத்தின் டைட்டில் உள்ளிட்ட அனைத்தும் கடந்த மாதத்தின் துவக்கத்தில்தான் வெளியானது.

உற்சாகத்தில் ரசிகர்கள்
ஆனால் எவ்வளவு தூரம் ரசிகர்களை சோதித்தார்களோ, அதற்கெல்லாம் சேர்த்து சிறப்பான வகையில் அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்தனர் தயாரிப்புத்தரப்பினர். லோகேஷும் இந்த அப்டேட்களில் இணைந்துக் கொண்டார். தொடர்ந்து படக்குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் புறப்பட்டு செல்லும் வீடியோவும் வெளியானது. விஜய்யும் இந்த வீடியோவில் இணைந்தது ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.

விறுவிறு லியோ பட சூட்டிங்
இதையடுத்து கடந்த மாதம் முதல் வாரத்தில் துவங்கிய லியோ படத்தின் சூட்டிங், தற்போது 40 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் விஜய் வயதான கேங்ஸ்டராக நடித்துவருவதாக கூறப்படும் நிலையில், அவருடன் மோத 6 வில்லன்கள் படத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் படத்தில் மிஷ்கின், கவுதம் மேனன் என இரண்டு வில்லன்களின் போர்ஷன்கள் நிறைவடைந்து அவர்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டனர்.

ஒரே பேக்கிரவுண்ட்
இதனிடையே, அந்த வீடியோவில் விஜய் மற்றும் சஞ்சய் தத் இருவரும் பேசி சிரித்தபடியே ஒரு இடத்தில் அமர்கின்றனர். அங்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜும் அவர்களுடன் வந்து இணைந்துக் கொள்கிறார். இந்த காட்சியில் மரத்தினால் ஆன பேக்கிரவுண்டில் ஐ லவ் சாக்லேட் என்ற வாசகம் காணப்படுகிறது. முன்னதாக வெளியான படத்தின் டைட்டில் லுக் வீடியோவிலும் சாக்லேட் பிரதானப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெளியான விஜய் -லோகேஷ் போஸ்டர்
இதனிடையே படம் குறித்த அறிவிப்பின்போது வெளியான போஸ்டரில் விஜய்யும் லோகேஷும் தங்களது காப்புகளுடன் மல்லுக்கட்டுவது போல இருக்கும் அதன் பேக்கிரவுண்டும் தற்போது ஐ லவ் சாக்லேட் பேக்கிரவுண்டும் ஒரே இடமாக காட்சியளிக்கிறது. முன்னதாகவே விஜய் -லோகேஷ் போஸ்டர் வெளியான நிலையில், அதை எப்படி முன்னதாகவே திட்டமிட்டனர் என்பது குறித்தும் ரசிகர்களை யோசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











