லியோ படத்தின் ப்ரமோ வீடியோ மேக்கிங்.. ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் அனிருத்!

சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ படம்.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வருகிறது லியோ.

இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரின் ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. படத்தின் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் அனிருத்.

விஜய்யின் லியோ படம்

விஜய்யின் லியோ படம்

நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், சாண்டி, பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் கூட்டணியில் உருவாகி வருகிறது விஜய்யின் 67வது படமான லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மாதத்தில் துவங்கிய நிலையில், சென்னையில் எளிமையான பூஜை போடப்பட்டு, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் சூட்டிங் நடத்தப்பட்டது.

விஜய்க்கு ஜோடியான த்ரிஷா

விஜய்க்கு ஜோடியான த்ரிஷா

தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள், டைட்டில், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அப்டேட்களை படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் வெளியிட்டனர். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு படத்தில் விஜய்க்கு ஜோடியாக இணைந்துள்ளார் த்ரிஷா.

காஷ்மீரில் லியோ சூட்டிங்

காஷ்மீரில் லியோ சூட்டிங்

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் காஷ்மீரின் ஸ்ரீநகரில் துவங்கியுள்ளது. இதற்கென படக்குழுவினர், தனி விமானம் மூலம் ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றனர். அங்கு படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காஷ்மீரி படத்தின் சூட்டிங் 60 நாட்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ்

அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ்

தொடர்ந்து சென்னை திரும்பும் படக்குழுவினர், அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்து அப்டேட் தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ரிலீஸ் குறித்தும் படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக டைட்டில் வெளியீட்டின்போதே அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

லியோ படத்தின் டைட்டில் ப்ரமோ

லியோ படத்தின் டைட்டில் ப்ரமோ

படத்தின் டைட்டில் ப்ரமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அனிருத் இசையில், வித்தியாசமாக வெளியாகி ரசிகர்களை இந்தப் ப்ரமோ கவர்ந்தது. வித்தியாசமான விஜய்யையும் ரசிகர்களுக்கு இந்த வீடியோ அறிமுகப்படுத்தியது. பின்புலத்தில் வித்தியாசமான பாடலும் இசையக்கப்பட்டது.

டைட்டில் ப்ரமோ மேக்கிங் வீடியோ

டைட்டில் ப்ரமோ மேக்கிங் வீடியோ

இதனிடையே, இந்த வீடியோவின் மேக்கிங் வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பாடலுக்காக தன்னுடைய மியூசிக் டீமிற்கு நன்றி கூறியுள்ள அனிருத், பிளடி ஸ்வீட் என்றும் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X