ஐயையோ அது நான் இல்லைங்க... போட்டோஷாப் வேலை... நடிகர் விஜய் மானேஜர் ஷாக்.

By

சென்னை: தளபதி 65 படத்தை யார் இயக்க போவது என்பது பற்றி, தான் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று நடிகர் விஜய் மாஜேனர் ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதில் அவர் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

மற்றும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் டெல்லி, கர்நாடகா மாநிலங்களில் நடைபெற்றது. அடுத்து சென்னையில் நடைபெற உள்ளது.

தளபதி 65

தளபதி 65

இதை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தளபதி 65 படம் பற்றி புதிய தகவல்கள் இணையத்தில் வைரலாகின. இதையடுத்து #Thalapathy65 என்ற ஹேஷ்டேக்கை, டிரெண்டானது.

சன் பிக்சர்ஸ், ஷங்கர்

சன் பிக்சர்ஸ், ஷங்கர்

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வைரலாகின. அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும் ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்தனர்.

மெசேஜ்

இதற்கு ஆதாரமாக நடிகர் விஜய்யின் மானேஜர் ஜெகதீஷ் அனுப்பிய வாட்ஸப் மெசேஜையும் பதிவிட்டிருந்தனர். ஷங்கருடன் விஜய் மீண்டும் இணைந்தால் சூப்பராக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் தெரிவித்தனர்.

பொய் தகவல்

அதே நேரம், இது பொய்யான தகவல் என்றும் ஷங்கர் இயக்கி வரும், இந்தியன் 2 படம் முடியவே அடுத்த வருடம் ஆகிவிடும் என்றும் அதற்குள் எப்படி ஷங்கர் இந்த படத்தை இயக்குவார்? என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மறுப்பு

மறுப்பு

இந்நிலையில், தான் அனுப்பியதாக சொல்லப்பட்ட வாட்ஸ் அப் மெசேஜ் பொய் என்று மறுத்துள்ளார் விஜய் மானேஜர் ஜெகதீஷ். அது போட்டோஷாப் வேலை என்றும் தான் யாருக்கும் அப்படி மெசேஜ் அனுப்பியதில்லை என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X