புத்தாண்டில் காத்திருந்து ஏமாந்துபோன புள்ளீங்கோ.. மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் வரலையே!

சென்னை: விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் படத்தின் செகன்ட் லுக் வெளியாகவில்லை.

நடிகர் விஜய் நடிக்கும் 64வது படத்தை கைதி படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

பேட்ட படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜயின் படமும் விஜய் சேதுபதியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதனை விஜய் ரசிகர்கள் சந்தோஷமாக கொண்டாடினர்.

இந்தியளவில் ட்ரென்டிங்

இந்தியளவில் ட்ரென்டிங்

மாஸ்டர் என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்தனர் ரசிகர்கள். அந்த ஹேஷ்டேக் இந்தியளவில் நேற்று ட்ரென்ட்டிங்கில் டாப்பில் இருந்தது.

வெளியாகவில்லை

வெளியாகவில்லை

இந்நிலையில் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று காலை முதல் விஜய் ரசிகர்கள் ட்ரென்ட் செய்தனர். ஆனால் சொன்னபடி படத்தின் இரண்டாவது லுக் வெளியாகவில்லை.

தள்ளி வைப்பு

தள்ளி வைப்பு

இதனால் புத்ததாண்டு நாளில் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இன்று சூரறைப்போற்று படத்தின் இரண்டாவது லுக் மற்றும் தர்பார் படத்தின் புரமோ ரிலீஸானதால் மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X