“எம்ஜிஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர்ஸ்டார் நீதான்”.. நீண்ட 'பிகில்' அடிக்கும் விஜய் அம்மா!

எம்ஜிஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என அவரது தாய் ஷோபா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Super Star Vijay : விஜய் அம்மா ஷோபா எழுதிய கவிதை | Today's Tea Vadai Pechu

சென்னை: நடிகர் விஜய்க்கு அவரது தாய் ஷோபா உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். ஏராளமான ரசிகர்களை கொண்ட விஜய், பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக திகழ்கிறார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா, அவருக்கு தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் அவர் எம்ஜிஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக, விஜய்யை கொண்டாட உலகமே காத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

தளபதி

தளபதி

கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, " ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து பின் தாயின் உள்ளம் நோக்கி வரும். அவளும் உச்சி முகர்வாள். ஆனால், நான் பெற்ற பிள்ளை இன்று கோடானுகோடி தாய்மார்கள், ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களும் அதை தளபதியாய் கொண்டாடிக் கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் சிறு ஈரம் கசிந்து வழிகிறது. அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க விஜய் உன்னைப் பற்றி.

உச்சி குளிர்கிறது

உச்சி குளிர்கிறது

நீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை எல்லாம் (ஏற்றம், இறக்கம், தோற்றல், போற்றல்) அசை போட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சிக் குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிறதே அந்த நுண்ணிய உணர்வுகளை எந்த காகிதத்தில் வடிப்பது.

ஆனந்தம்

ஆனந்தம்

அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்ப்பரிக்கும் இளவயதில் கூட நீ அமைதியின் அவதாரமாய் இருக்கையில் இயங்குகையில் என் ஆழ் மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிகையில் அதை எந்த பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்.

இன்பத்தளிப்பு

இன்பத்தளிப்பு

நீ உன் அழுகை நிறுத்தி, முதல்முதல் உன் பூவிதழ் விரித்து, புன்னகைத்தது முதல் இன்று உன் இதயத்தளவு ரசிகர்களின் பெருவெள்ளத்திற்கு இடையே இன்பத்தளிப்பில் நீ புரியும் புன்னகையை விவரிக்க... தேடி கிடைக்காமல் வார்த்தைகளை கடன் வாங்கும் (கோடி கோடியாய் பொருள் இருந்தும்) நிலையை ஒரு சிறப்பிதழுக்குள் என்னால் எப்படி எழுதிவிட முடியும்? சுருங்கக்கூறின்.

நீண்ட பிகில் அடிக்கிறேன்

நீண்ட பிகில் அடிக்கிறேன்

திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர், திரு.எம்.ஜி.ராமச்சந்திரன், திரு.ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில், தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்...", என அவர் எழுதியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X