Shoba chandrasekar: வாகை சூடு விஜய்.. விஜய் அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்து சொன்ன அவரது அம்மா!
சென்னை: நடிகர் விஜய் முன்னணி ஹீரோவாக, ரசிகர்களின் தளபதியாக, விஜய் மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து செல்பவராக பல விஷயங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருபவர். இவருடைய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மட்டும் எப்போதும் குறை வைத்ததில்லை. ரசிகர்கள் விஜய்யை, அவரது படங்களை கொண்டாடி வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை சமீப காலங்களாக அதிகமான அளவில் முன்னெடுத்து வந்தார் விஜய். இதுவே இவரது அரசியல் பிரவேசத்திற்கான முன்னெடுப்பாக கருதப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய கட்சியை அறிவித்துள்ளார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்துள்ள விஜய், தன்னுடைய அரசியல் பிரவேசம், சினிமா பிரவேசம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதற்காக தன்னை நீண்ட காலங்களாக தயார் படுத்தி வந்துள்ளதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒப்புக் கொண்டுள்ள இன்னொரு படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே தான் விரும்புவதாகவும் அதுவே தனது வேட்கை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் இன்றைய தினம் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் மூலம் நீண்ட காலங்களாக பொதுநலப் பணிகளை முன்னெடுத்துவந்த விஜய், சமீப காலங்களில் இந்தப் பணியை அதிகரித்திருந்தார். அவரது இந்த செயல்கள், அவரது அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்களுக்கும் தெளிவை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் தனது தமிழக வெற்றி கழகத்தின் அறிவிப்பை அவர் சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து இந்த கட்சி மற்றும் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்த தெளிவையும் தன்னுடைய ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளார்.
விஜய் அரசியல் பிரவேசம்: விஜய்யின் அரசியல் பிரவேசம் முன்னதாகவே கணிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய தினம் முறையான அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த மாதம் 25ம் தேதி சென்னையில் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்த நிலையில் கட்சியின் தலைவர் உள்ளிட்டவர்கள் குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய அறிக்கையில் இதையும் குறிப்பிட்டுள்ளார் விஜய். மேலும் தான் ஒப்புக் கொண்டுள்ள இன்னொரு படத்தையும் முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். அவரது அரசியல் பிரவேசம் உற்சாகப்படுத்தினாலும் நடிப்பு குறித்த அவரது அறிவிப்பு ரசிகர்களை வருத்தப்பட செய்துள்ளது.
விஜய் அம்மா வாழ்த்து: இந்நிலையில் விஜய்யின் அம்மாவும் பிரபல பாடகியுமான ஷோபா சந்திரசேகர் தன்னுடைய மகனுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். விஜய்யின் இந்த முடிவுக்கு அம்மாவாகவும் சமூக பொறுப்புள்ள பெண்மணியாகவும் தான் பதில் சொல்ல வேண்டியுள்ளதாக அவர் தனியார் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு அரசியல் பொறுப்பு உள்ளதாகவும் ஏராளமான மக்களின் அபிமானத்தை பெற்ற விஜய் போன்ற ஒரு ஆளுமைக்கு அரசியலில் நுழையும் பொறுப்பு இருப்பதாக தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார். புயலுக்கு பின் அமைதி என்று கூறப்படும் நிலையில், விஜய்யின் அமைதிக்கு பின்பு ஒரு அரசியல் புரட்சி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகை சூடு விஜய்: மகனுக்கு ஓட்டுப் போடவிருக்கும் ஒரு அம்மாவாக தனக்கு இதில் தனி சந்தோஷம் இருப்பதாகவும் ஷோபா கூறியுள்ளார். தமிழக வெற்றி கழகம் பெயருக்கு ஏற்றாற்போலவே தமிழகத்தில் வெற்றி பெறும் என்றும் அவர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். விஜய்க்கு மதம், ஜாதி போன்றவற்றில் ஈடுபாடு இல்லை என்றும் தனக்கு பின்னால் இருப்பவர்களும் முன்னால் வரவேண்டும் என்று நினைப்பார் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். அவருடைய ரசிகர்கள் தற்போது தொண்டர்களாக மாறியுள்ளதாகவும் விரைவில் தலைவர்களாக மாறுவார்கள் என்றும் ஷோபா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய ஷோபா, வாகை சூடு விஜய் என்று விஜய்க்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











